பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/776

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 465 இராமநாதபுரத்தையடுந்த திருஉத்தரகேசமங்கை இறைவனது பெயரைத் தமது பெயராகக் கொண்டு இருப்பதால், தானம் பெற்ற மங்களேசுவர குருக்கள் இராமநாதபுரத்தைச் சார்ந்தவ ராக இருக்க வேண்டும் அல்லது திருஉத்தரகேசமங்கை கோயில் பூஜாகரராக இருக்க வேண்டும் எனத் தெரிகிறது. அவரது தந்தையின் பெயரில் உள்ள நம்பி' என்ற விருதியில் இருந்து குருக்களது முன்னோர்கள் தஞ்சை வள நாட்டில் இருந்து சேது நாட்டில் குடியேறிய வைணவர் வழியினர் என்பதையும் ஊகிக்க முடிகிறது. ஆனால் இந்த தானத்தை பெற்றவர் மங்களநாதசுவாமி பூசையை மேற்கொண்டுள்ள ஸ்மார்த்தர் என்பது தெளிவு. மற்ற செப்டேடுகளையும் விட இந்த செப் பேட்டில் ஒரு செய்தி மறைமுகமாகக் கொடுக்கப்பட்டு இருக்கிறது அதாவது இந்த சேதுபதி மன்னர் ஒருநாள் இரவு உணவு உண்டு கொண்டு இருந்தார். அப்பொழுது மன்னரது உணவு அறையில் இருந்த விளக்கு திடீரென அணைந்தது; அந்தகாரம் குழ்ந்து நின்றது. இந்த நிகழ்ச்சியை ஒரு அசாதாரண நிகழ்வாக மன்னர் கருதினார். இராமநாதபுரம் அரண்மனையில் முன்னர் எப்பொழுதும் நிகழ்ந்திராத செயல் அல்லவா? இதற்கு வேத விற்பன்னர்கள் வழங்கிய அறிவுாை பாவநிவாரணமாக புனிதச் செயல் ஒன்றினை மேற்கொள்ள வேண்டும் என்பது. அதனால் இந்த பூதானத்தை மன்னர் மேற்கொண்டார் எனத் தெரிய வருகிறது. பாவநிவாரணமாகவும் பூதானம் கொடுத்த என்ற தொடர் இதனைத் தெரிவிக்கின்றது. ஜீரண போஜன காலத் தில் திருவிளக்கு திருவேறின என்ற தொடர் முன்னால் குறிக்கப்பட்டுள்ள நிகழ்வினைத் தெரியப்படுத்துகிறது. இவ்விதம் தங்களது பெற்றோர் மூதாதையரது பாவ நிவாரணத்திற்காக அந்தணர்களுக்கு தானம் வழங்குவது நமது நாட்டின் தொன்மையான மரபு. அதனை சேதுபதி மன்னர்களும் பின்பற்றியதில் புதுமை இல்லை. இந்த மன்னரது முன்னவரான திருமலை ரெகுநாத சேதுபதி மன்னர் பெற்றோர்களுக்கு மட்டும் அல்லாமல், அவரால் மிகவும் போற்றிப்பணியப்பட்ட மதுரை திருமலை நாயக்க மன்னரது பாவ நிவாரணத்திற்கும் திருப் பெருந்துறை திருக்கோயிலில் தானம் வழங்கியதைப் பார்த்தோம் அல்லவா !