பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/796

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 485 பாவா பள்ளிவாசல் என்ற பெயரில் வழக்குப் பெற்று இருப்பது ஒப்பு நோக்கத் தக்கது. இந்தப் பள்ளிவாசலுக்கு இராமநாத புரம் வட்டம் எக்கைகுடி கிராமத்துடன் இணைந்த புதுக்குளம் என்ற கிராமத்தை இந்தச் செப்பேடு குறிப்பிடுகின்றது. வரு வாய்த்துறை பதிவேடுகளில் இந்த ஊர் பக்கிரி புதுக்குளம் என்ற பெயரில் பதிவாகியுள்ளது. மனித இனத்தின் முதல் மனிதராக திருக்குர்ஆனும், பைபிளும் போற்றுகின்ற ஆதம் அவர்களது மக்களான அபல், கெயின் ஆகிய இருவரது புனித அடக்கவிடமாக இந்த பள்ளி வாசல் கருதப்பட்டு வருகின்றது. இறைவனது கட்டளையை மீறிய ஆதம் அவர்களும் அவர்களது துணைவியாரும் சொர்க் கத்தில் இருந்து பூவுலகிற்கு அனுப்பப்பட்டபோது ஆதம் துணை வியார் அரபுத் தாயகத்திலும், ஆதம் இலங்கை நாட்டின் மிக உயரமான சுமனக் கூடமலையிலும் வந்து இறங்கியதாக நம்பப் படுகிறது. இந்த மலை பெளத்தர்கள் போதி சத்துவரான புத்த பகவானது திருவடிகளை தாங்கிய இடமாகவும் இந்து சமயத் தினர் சிவபெருமானது பாதத்துரளி சிவனடிபாத மலை என்றும் நம்புகின்றனர். மேலும் இலங்கைத் தீவை இந்தியத் துணைக் கண்டத்துடன் இணைக்கும் கடலில் இராமேசுவரத்தையும் எதிர்க்கரையான தலைமன்னாரையும் தொட்டுச் செல்லும் இருபத்தி மூன்று மைல் தொலைவு மணல் திட்டு ஆதமின் பாலம்' என பல நூற்றாண்டுகளாக வழங்கப்படுவதாலும் அவரது மக்கள் இந்தப் பகுதியில் வாழ்ந்து மறைந்திருப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக நம்பப்படுகிறது. கெயின், அபெல் ஆகிய இருவரது கதைகள் பைபிளின் பழைய ஏற்பாட்டில் காணப் படுகிறது." இந்தச் செப்பேட்டின் இறுதிப்பகுதியில் இந்த தருமத் திற்கு 'தமிழனாகிலும் நாலா வர்னத்திலே உள்ளவனாகிலும் இஸ்லாமானவனாகிலும் கங்கையிலும் சேதுவிலும் மக்க, மதினத்திலும் என காப்புரை வாசகங்கள் சேர்க்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது ஆகும். பைபிள் - பழைய ஏற்பாடு ஆதியாகமம் - 4.