பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/797

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

486 - எஸ். எம். கமால் புதுவெள்ளம் புரட்டிக்கொண்டு சேர்க்கும் மணற் தொகுதி ஏக்கர் எனப்படும். இந்த வழக்கில் எக்கையாகி உள்ள ஊர் எக்கைகுடி. இந்தக் ஊர்க்கண்மாய்ப் பாசனத்தில் உள்ள பகுதி தான் இந்தச் செப்பேட்டில் சருவமானியமாக கட்டளையிடப் பட்டுள்ள புதுக்குளம் பகுதியாகும். இந்தப்பகுதி ஒருச்சிறகு மடையில் நீர்பாய்ந்து நெல்விளைகின்ற பகுதி எனச் செப் பேட்டில் காணப்படுவதில் இருந்து சம்பந்தப்பட்ட இடம் நல்ல வளமைமிக்க பகுதி எனக் கொள்ளமுடிகிறது. இதற்கு நான்கு எல்கை கொடுக்கப்பட்டுள்ளதில் குன்றா வயக்கால் வாழவந்த அம்மன் கோயில், பச்சரித்திடல், கானத்திடல் சேதுமார்க்கம், அச்சங்குடி,கொத்தங்குளம் புரவு ஆகியவை குறிக்கப்பட்டுள்ளன. வாழவந்த அம்மன் என்பது புகார் நகரில் இருந்து பாண்டிய நாட்டிற்கு உலந்த பொருள் ஈட்டுதற்கு, மலர்ந்த சீர் மாடமதுரையகத்து 'ற்றகண்ணகி என்னும் கற்புத் தெய்வம். மதுரைக்குத்தெற்கே இராமநாதபுரம் திருநெல்வேலி மாவட்டங் களில் இந்த பத்தினி தெய்வ வழிபாட்டிற்காக அமைக்கப்பட்ட கோட்டங்கள் வாழவந்த அம்மன் கோயில்' என வழங்கப் படுகிறது. இன்றைய நிலையில் அந்தக் கோட்டங்களில் பத்தினி தெய்வவழிபாடு பராசக்தி (காளி) வழிபாடாக மாறி உள்ளது பள்ளர்சேரி இந்தப்பகுதிமில் பள்ளச்சேரி என்றும் பச்சேரி என வழக்கு பெற்றுள்ளது. . . . . m மற்றும் புரவு, கடைக்கொம்பு. சிறகுதிடல், கண்மாய் மாவடை, மரவடை என்பன இந்த வட்டாரத்தின் வழக்குகள்.