பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/798

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 செல்லமுத்து விஜயரெகு நாதசேதுபதி (கி.பி. 1748 - 1760) இந்த மன்னரது ஆட்சி கி.பி 1748 முதல் பதிமூன்று ஆண்டுகள் இராமநாதபுரம் சீமையில் நீடித்தது. இவர் ஆட்சிக்கு அருந்துணையாக பெரும் வீரர் பிரதானி வெள்ளையன் சேர்வை விளங்கி வந்தார். கி.பி.1702, கி.பி 1709 ஆகிய ஆண்டுகளில் மறவர் சீமையைக் கைப்பற்ற படையெடுத்து படுதோல்வி அடைந்த தஞ்சை மராத்திய மன்னர் இந்த மன்னரது ஆட்சி யிலும் மற்றுமொரு படையெடுப்பை மேற் கொண்டார். சேது நாட்டின் காவலர் அனுமந்தக் குடியில் அந்த படைகளை பிரதானி வெள்ளையன் சேர்வை முறியடித்துத் துரத்தினார். மதுரையைக் கைப்பற்றியிருந்த ஆங்கிலத் தளபதியான கோப் பையும் முறியடித்து மதுரையில் நாயக்க மன்னரது கடைசி வாரிசான விஜயகுமார பங்காரு திருமலை நாயக்கரை கி.பி.1751 மதுரை அரியணையில் அமர்வதற்கும் இந்த மன்னர் பேருதளி புரிந்தார். இவரது ஆட்சியில் டச்சுக் சளரர்கள், தங்கள் வாணி பத்தை இராமநாதபுரம் சீமை கரைப் பகுதியில் பெருக் கினார்கள். சேது மன்னர்களுக்கே உரிய சமய பணி ஈடுபாடு காரண மாக இந்த மன்னர் இராமநாதபுரம் கோட்டைக்கு வெளியே லெட்சுமி புரத்திலும் கன்னியாகுமாரி சாலை கொக்காடி கிராமத்திலும் அன்னசாலைளையும் தண்ணிர் பந்தலையும் நிறுவினார். இவரது அமைதியான ஆட்சி கி.பி. 1760ல் முடிவுற்றது.