பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடன காசிநாதன் M.A இயர் , , , , பி| // தரமணி தொல் பொருள் ஆய்வு, துறை சென்னை. 113 வாழ்த்துரை டாக்டர். எஸ்.எம். கமால் அவர்கள் எழுதிய சேதுபதி மன்னர் செப்பேடுகள் என்னும் இந் நூல், கி.பி 17-18ம் நூற் றாண்டுகளில் சேதுபதி மன்னர்கள் எவ்வளவு சீரோடும் சிறப் போடும் விளங்கினார்கள் என்பதைப் படம் பிடித்துக் காட்டு வதாக உள்ளது. இந்நூலில் மொத்தம் 89 செப்புப் பட்டயங் களும் ஒர் ஒலைப்பட்டயமும் ஆக 90 பட்டய ங்களின் வாசகங் கள் கொடுக்கப்பட்டு அவ்வாசகங்களுக்கான விளக்கக் குறிப்பு களும் பக்கத்திலேயே தரப்பட்டுள்ளன. சேதுபதி மன்னரான சடைக்கன் சேதுபதி காலம் முதல் முத்துராமலிங்க விஜயரகுநாத சேதுபதி முடிய 78 செப்புப் பட்டயங்களும், அரச குலத்தின் உற வினர்களான நால்வர் வெளி விட்ட செப்புப் பட்டயங்கள் மொத்தம் ஆறும்,அரசு அலுவலர்கள், மற்றவர்களதுமான செப்புப் பட்டயங்கள் ஐந்தும் ஆக மொத்தம் 89 செப்புப் பட்டயங்கள் காணப்படுகின்றன. இச்செப்புப் பட்டயங்கள் எந்தெந்த காரணத் திற் காக வழங்கப்பட்டன என்பதையும் ஆசிரியர் பட்டியலிட்டுத் தந்திருப்பது மகிழ்ச்சிக்குரிய ஒன்றாகும். அப்பட்டியலைக் காண கின்ற பொழுது இந்துச் சமயத் திருக்கோயிலுக்கு அதிக அளவிலும், அதற்கு அடுத்து இஸ்லாமியப் பள்ளி வாசல் களுக் கும், சமணத் திருக்கோயில்களுக்கும், கிறித்துவத் தேவாலயத் துக்கும் இம்மன்னர்கள் கொடை வழங்கியிருப்பது தெரிய வருகிறது. சேதுபதி மன்னர்கள் காலத்தில் நாடு மிக அமைதியான சூழ்நிலையில் இருந்தது என்பதையும் அவர்களுடைய ஆட்சிக் காலம் ஒரு பொற்காலமாக மக்களால் போற்றப்பட்டது என் பதையும் இச்செப்புப் பட்டயங்கள் மூலமாக அறிய முடிகிறது. ஆசிரியர் தம்முடைய முன்னுரையில் இச்செப்புப் பட்டயங்கள் மூலம் தெரியக்கூடிய செய்திகளை மிக அருமையாகத் தொகுத்