பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

=- ཟས་སོགས།། 56 எஸ். எம். கமால் - உயரமும், உடற்கட்டும் உடைய இவர்கள், ஈட்டி. வில், அம்பு வளரி, கவண், துப்பாக்கி ஆகியவைகளில் நல்ல தேர்ச்சி பெற்றி ருந்தனர். முன் பயிற்சி இல்லாமல் பல்வேறு அணிகளாகத் திரண்டு கட்டுப்பாட்டுடனும், விரைவுடனும் போர்க்கலங்களில் முன்னேறிச் செல்லத்தக்கவர்கள். இவர்களது தாக்குதலை சாதாரண காலாட் படையினர் சமாளித்தல் இயலாது. இவர்களின் பிரதான ஏழுகிளைகளில் கொண்டையன் கோட்டை, செம்பி நாடு இவைகளைச் சேர்ந்தவர்கள் இங்கே மிகுதியாக வசித்து வந்தனர். இவர்களது போர்த்திறனையும்மான. உணர்வினையும் மதித்த சேதுபதி மன்னர் இவர்களுக்கு ஆங்காங்கு ஜீவித காணிகள் வழங்கி இருந்தார். வாளும், வேளும் தாங்கி சமர் புரியக்கூடிய ஒருவருக்கு ஆண்டுக்கு ஐந்து கலம் அரிசி கிடைக்கத்தக்க நஞ்சை நிலம் கொடுக்கப்பட்டிருந்தது. துப்பாக்கி சுடக் கூடியவருக்கு ஏழு கலம் கிடைக்கத்தக்க நிலமும் நூறு வீர்ர்களுக்கு தலைமை வகிக்கும் சேர்வைக்காரருக்கு ஐம்பது: ക് அரிசி கிடைக்கக்கூடிய நிலங்களும் வழங்கப்பட்டு இருந்தன. இவர்கள் அனைவரும் நாட்டுக்கு ஆபத்து ஏற்படும் நிலையில் படைக்க்லன்கள் ஏந்தி போரிடுதல் வேண்டும். மேலும் அமைதிக் கா லத்தில்இவ ர்கள் காவல்ப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனர் அப்பொழுது காவல்பணி கொட்டாரக்காவல், திசைக்காவல் தெற்கத்தி காவல், நாட்டுக்காவல், தும்பச்சி காவல், தளவாய் காவுல் என ஆறுவகையாகப் பகுக்கப்பட்டு இருந்தன, இந்த செப்பேடுகளில் குடி படை' என்று குறிப்பிடப்படும் குழுஉச் சொற்களுக்கு விளக்கமாக இந்த மறவர்களைக் கொள்ளலாம். பள்ளர், பறையர் -- மேலும் "பள்ளு’’ 'பறை' எனக் குறிப்பிடப்பட்டு இருப்பது பாட்டாளி, விவசாயிகளான பள்ளர், பறையர் என்ற இனத்தவர், அன்றைய சமுதாய அமைப்பில் இந்த மக்கள் தீண்டப்படாதவர்களாகவே இருந்து இருக்க வேண்டும் என்பது தெரிய வருகிறது. கிழவன் என்ற ரெகுநாத சேதுபதி மன்னர் ஆட்சியில் மறவர் சீமையின் வடக்குக் காவல் அரணான திரு மெய்யம் மலைக்கோட்டையை பெரியதாகவும், புதிதாகவும் அமைத்து திறப்பு விழா செய்த பொழுது, இரண்டு பறையர்கள் பலி கொடுக்கப்பட்டனர் என்ற பயங்கரமான உண்மை புதுக்கோட்டை சமஸ்தான ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.