பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/804

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செப்பேடு எண் 58 (விளக்கம்) 1. செப்பேடு வழங்கியவர் : முத்துவிஜய ரெகுநாத சேதுபதி 2. செப்பேடு பெற்றவர் : தேர்போகி சங்கரய்யர் புத்தி ரன் வெங்கடகிருஷ்ணன் 3. செப்பேட்டின் காலம் : சகம் 1669 பிரபவ ஆண்டு மகா - மாசம் (கி.பி. 1747) 4. செப்பேட்டின் பொருள் : அக்கிரகார தர்மத்திற்கு பூமி தானம இந்தச் செப்பேட்டை வழங்கியவர் முத்துவிஜய ரெகுநாத சேதுபதியெனக் குறிப்பிட்டிருந்தாலும் இந்தச் செப்பேட்டின் காலத்தை ஆய்வு செய்யும் பொழுது இதனை வழங்கியவர் முத்துக் குமார விஜயரகுநாத சேதுபதி என்பது தெரிய வருகிறது. செப் பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ள பிரபவ ஆண்டிற்கு சரியான சக ஆண்டு 1669 ஆகும். சகம் 1648 எனிக் குறிப்பிட்டிருப்பது தவறு. இந்தச் செப்பேட்டில் சேதுபதி மன்னரது விருதாவளியாக தொன்னுறு சிறப்புப் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவை களில் எதிரிட்ட மறுவலர்கள் சிரமுறிவு வெட்டு நிலையிட்ட தீரன் (வரிகள் 16, 17) வைகை மான தியானி (வரி 25) பொதிய மால் விரையன் கங்கையாதீபன் (வரி 25) நரசிம்ம கேதனன் (வரி 28) என்ற ஐந்து புதிய விருதுகள் இந்த விருதாவளியில் இடம் , வெற்றுள்ளன. s கி.பி. 1730ல் மறவர் சீமையின் ஐந்தில் இரண்டு பகுதியை பெற்று சின்னமறவர் சீமை, அல்லது சிவகங்கைச் சீம்ை என்ற புதிய தன்னரசு நாட்டினை ஏற்படுத்தியவர் சசிவர்ணத்தேவர் அவரது மகன் முத்துவடுகநாத தேவருக்குப் பிரதானியாக வழங்கி கியவர் முல்லையூர் தாண்டவராயப் பிள்ளை என்பவர். சிறந்த அமைச்சராக அரசியல் அறிஞராகத் திகழ்ந்த இவர், இராமநாத புரம். சிவகங்கையும் ஒரே தலைமையில் இணைந்தது என்ற முறையில் சிறப்பாக அரசின் நிர்வாகத்தை இயக்கியவர். இவர்