பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 57 மேலும், சேதுபதி மன்னர் செப்பேடுகள் அனைத்திலும் ...மேல் நோக்கிய மரமும் கீழ் நோக்கிய கிணறும் திட்டு, திடல், மாவடை மரவடை, குடி, படை, பள்ளு, பறை நிதி நிஷேச செலதருபாசன மெனச் சொல்லப்பட்ட அட்டபோக தேச சுவாமியங்களும்...' என்ற சொற்றொடர் காணப்படுவதில் இருந்து தானம் வழங்க பெறும் ஊர்களின் நிலையான பொருள் போன்று 'பள்ளும் பறையும் இன்றியமையாதவர்களாக கருதப்பட்டு வந்தனர் என்பது வெளிப்படை. இவர்களைத் தவிர சேதுபதி மன்னர் சீமையில் இடையர் சாணார், செட்டி, கோமுட்டி, வாணியச்செட்டி, வண்ணார், குடும்பர், சக்கிலியர், பண்டாரம், கொல்லர், தச்சர், வலையர் அம்பட்டர், குருக்கள், ராவுத்தர், மரைக்காயர் என்ற பிரிவு மக்களும் இருந்து வந்தனர். இந்த மக்களிடையே செளஜன்யமும் கூட்டு மனப்பான்மையும் நிலவி வந்தது. வேளாண்மைத் தொழில் பொதுவான தொழிலாக இருந்தாலும், இதற்கு அடுத்தபடியாக நெசவுத்தொழில் இருந்தது. துலுக்கர், பட்டுநூல்க்காரர், இளம் பஞ்சுக்காரர் வள்ளுவர் ஆகிய மக்கள் இந்தத் தொழிலில் ஈடுபட்டு இருந்தனர். பிராமணர் வடபுலத்திலிருந்து தமிழகம் சேர்ந்த ஆரியர்கள் சங்க காலத்திலேயே தமிழ்ச் சமுதாயத்தின் அங்கமாகி விட்டனர். வேதம் ஒதுதல், இறைவழிபாடு நடத்துதல், ஆகிய ஆன்மீகப் பணிகளுடன் அரச மக்களது அந்தாங்கப் பணியாளர்களாகவும், தூதுவர்களாகவும் இருந்து வந்தனர். இதனால் தமிழ்வேந்தர்கள் அவர்களுக்கு பொன்னும், பூமியும் வழங்கிச் சிறப்பித்தனர். பெளத்த, சமண மதங்களினால் இந்து மதம் பாதிக்கப்பட்ட சில நூற்றாண்டுகள் தவிர்த்து ஏனைய காலங்களில் அவர்களது வாழ்க்கை முறை பாதிக்கப்படவில்லை. சோழர்களும், பாண்டியர்களும் நாயக்க, மராத்த மன்னர் களும், இவர்களை பெரிதும் போற்றிப் புரந்தனர். அவர்கள் வழி யில் பதினேழு, பதினெட்டாவது நூற்றாண்டுகளில் சேதுபதி மன்னர்களும் அந்தணர்களுக்கு ஆக்கமும், ஆதரவும் வழங்கினர். வேத விற்பன்னர்களாகவும் வியாகரண பண்டிதர்களாகவும் விளங்கிய அவர்களுடைய ஆன்மீக ஞானத்தொண்டினால் மறவர் சிமை மக்கள் பெரிதும் பயனடைய வேண்டும் என்ற பேரவா