பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/810

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செப்பேடு எண். 59 (விளக்கம்) 1. செப்பேடு வழங்கியவர் : செல்லமுத்து ரெகுநாத சேதுபதி - 2. செப்பேடு பெற்றவர் : திருவாவடுதுறை ஆதினகர்த்தர் - அம்பலவாணன் பண்டார சன்னதி 3. செப்பேட்டின் காலம் சாலிவாகன சகாப்தம் 1674 ■ ஆங்கிரச வருடம் மார்கழி 20ந் o தேதி (கி.பி. 31.12.1752) . 4. செப்பேட்டின் பொருள் மகேஸ்வர பூஜைக்கு நாட்டுசேரி. கிராமம் சர்வமானியம். இந்த மன்னரது ஐம்பத்தி மூன்று சிறப்புப்பெயர்கள் இந்தச் செப்பேட்டில் இடம் பெற்றுள்ளது. சுப்ரமணிய பாதார விந்த சேகரன் (வரி 8) பாசா விட்சனன் (வரி 20) வீணா பிரசங்கன் (வரி 21) என்ற மூன்று புதிய சிறப்புப் பெயர்களைத் தவிர ஏனைய விருதுகள் அனைத்தும், முந்தைய சேது மன்ன்ர்களில் செப்பேடுகளில் காணப்படுபவையாகும். இராமநாதபுரம் மன்னர்களுக்கும், திருவாவடுதுறை ஆதின கர்த்தர்களுக்குமிடையே ரெகுநாத சேதுபதி காலம் தொட்டு நெருக்கமான தொடர்புகள் இருந்து வந்தன. அந்த மன்னர் இந்த ஆதினத்துக்கு கி.பி. 1660ல் நான்கு கிராமங்களை தான மாக வழங்கியிருந்தார். அவைகளில் நாணக்குடி கிராமம் மட்டும் அந்த ஆதினத்தாருக்கு பயன்படாத நிலையில் இருந்ததை நீக்கி அதற்குப் பதிலாக இந்த மன்னர் நாட்டுசேரி என்று கிராமத்தை தானமாக வழங்கியதை-இந்தச் செப்பேடு குறிப்பிடுகின்றது.