பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 எஸ். எம். கமால் இந்த மன்னர்களுக்கு இருந்தது. ஆதலால் அசேசவித்துவான்கள் அவதானிகள், ருக்வேத சாகாந்தியபகர், யஜுர்பிரியர், கோயில் குருக்கள் என்ற பிராமண சிரேஷ்டர்களை ஆதரித்து அவர்களுக்கு மனை நிலங்களையும், விளைபுலங்களைக் கொண்ட ஊர்களையும் தானமாக வழங்கியுதவினர். மேலும் திருக்கோயில் பணி அன்ன சத்திரம் ஆகிய அறப்பணிகளை சிறப்புடன் நிறைவேற்றவும் இந்த அந்தணர்கள் நியமிக்கப்பட்டதை சில செப்பேடுகள் தெரி விக்கின்றன. இராமேஸ்வரம் திருக்கோயில் பணியில் இருந்த பிராமணர் தமிழ் ஆரியர் என்றும் பஞ்சதேசத்துப் பிராமணர் என்றும் ஏனைய திருக்கோயில் பணியில் இருந்த இதே மக்கள் குருக்கள் நம்பியார் பட்டர் என்றும் குறிக்கப்பட்டனர். இராமேஸ்வரம் திருக்கோயில் பணியில் இருந்த பிராம ணர்கள் மொத்தம் 512 பேர் என கி. பி. 1772-ல் இராமாநாத பண்டாரம் வரைந்து கொடுத்த இசைவு முறியில் குறிப்பிடப் பட்டு உள்ளது. இந்த ஆவணத்திற்கு சுமார் முப்பது ஆண்டு களுக்கு முன்னர் இயற்றப்பட்ட தேவை உலாவிலும், மெய் நூல் துறையில் விதி வழியே பூசிக்கும். ஐந்நூற்றுப் பன்னிருவர் ஆரியரும் ... ' என சரியாக கணக்கிடப்பட்டுள்ளது. மராட்டா பிராமணர்கள் : இவர்களும் பஞ்சதேசத்து பிராமணர்களின் வகையைச் சேர்ந்தவர்களானாலும் இவர்கள் மராட்டா குருக்கள் GTsūr in அழைக்கப்பட்டனர். தமிழ் பிராமணர்களுக்கு இல்லாத உரிமை இவர்களுக்கு இராமேஸ்வரம் திருக்கோயிலில் இருந்துவந்தது: இருக்கின்றது. திருக்கோயிலின் கருவறையில் உள்ள இறைவன் இறைவிக்கு ஆகம விதிகளின் படி ஐந்துகால பூஜைகளை நிறை வேற்றும் பணி இவர்களுடையது. தமிழ் பிராமணர்கள் இந்தத் திருக்கோயிலின் இறைபணியில் ஈடுபடுவதற்கு முன்னர், இந்த மராட்டா குருக்கள் இந்தப்பணிகளில் அவர்களை முந்திக் கொண்டனர் என்பதை கி. பி. 1745 ஆம் ஆண்டு செப்பேடு ஒன்றிலிருந்து (செ. எண். 86) தெரியவருகிறது. இவர்களில் சிறப்பும் செல்வாக்குமிக்க பிரமுகர்கள் சங்கர குருக்கள், ரெகுநாத குருக்கள், ஈஸ்வர பட்டர், ஆகியோர் பிரமுகர்களாக நவராத்திரி உற்சவங்களை நடத்துவதற்கும் சேதுயாத்திரையில் உதவுவதற்