பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/828

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செப்பேடு எண் 61 (விளக்கம்) 1. செப்பேடு வழங்கியவர் : முத்துராமலிங்க விஜயரெகுநாத சேதுபதி 2. செப்பேடு பெற்றவர் : இராமலிங்க குருக்கள் மகன் மங்களேஸ்வர குருக்கள் 3. செப்பேட்டின் காலம் : சகம் 1682 விக்ரம ஆண்டு வைகாசி மீ. (கி.பி. 1761) 4. செப்பேட்டின் பொருள் : மேற்படி குருக்களுக்கு கருக் காத்தி கிராமம் தானம் வழங்கப் பட்டது. இத்தச் செப்பேட்டை வழங்கிய மன்னர் பூரீமது முத்துச் செல்லத்தேவர் அவர்கள் புத்திரன் முத்துராமலிங்க விஜயரெகு நாத சேதுபதி யாகும். இவர் ஒராண்டு வயது பாலகராக இருக்கும்பொழுது (கி.பி. 1760)ல் சேதுபதி மன்னராக முடிசூட் டப் பெற்றார். இந்த செப்பேடு அந்த மன்னரால் வழங்கப்பட் டது என்பதைவிட மன்னரது பெயரால் வழங்கப்பட்டது என கொள்வது சிறப்பாக இருக்கும். ஆதலால் இந்தச் செப்பேட்டில் முந்தைய சேதுபதிகளின் சிறப்புடன் விளங்கிய ரெகுநாத திரு மலை சேதுபதியின் எழுபத்துமூன்று சிறப்புப் பெயர்கள் இந்தப் பால சேதுபதியின் விருதாவளியாக கொடுக்கப்பட்டுள்ளது. இவரது தந்தையின் பெயர் நெருஞ்சித் தேவர் என்பதாகும். ஆனால் இராமநாதபுரம் அரண்மனை சம்பிரதாயத்தையொட்டி 'முத்துச் செல்லத்தேவர் புத்திரன்’ என்று செப்பேட்டில் பொறிக் கப்பட்டுள்ளது. (வரி. 30)