பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/835

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

524. எஸ். எம் . கமால் 37ல் காணப்படும் உப்புப்பாதை' என்ற சொல்லிலிருந்து வாலிநோக்கம் கடற்கரைப்பகுதியில் முந்தைய காலங்களில் ஏராளமான உப்பளங்கள் அமைந்திருந்த பகுதி என்பதும் அங் கிருந்து உப்புப் பொதிகள் கொத்தங்குளம் வழியாக உள்நாட்டுக் குள் எடுத்துச் செல்லப்பட்டதும் தெரியவருகிறது. வண்டிப் போக்குவரத்துக்கு மட்டும் பயன்படும் பெரு வழிகள் அந்தக் காலத்தில் மிகவும் குறைவாக இருந்ததால், இத்தகைய செப்பேடு களில் அந்தப்பாதைகள் நான்கு எல்லைகளில் துலக்கமாக இடம் பெற்றுள்ளன. முன்னர் அளித்த செப்பேடுகளில் சேதுப்பாதை, இராமநாதபுரம் பாதை, பண்ணந்தை பாதை என்ற வழிகள் நான்கு எல்லைகளில் ஒன்றாகக் குறிப்பிடப்பட்டிருப்பது இங்கு நினைவு கொள்ளத்தக்கதாகும்.