பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/839

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செப்பேடு எண். 63 (விளக்கம்) 1. செப்பேடு வழங்கியவர் : முத்துராமலிங்க விஜய ரெகுநாத சேதுபதி 2. செப்பேடு பெற்றவர் : இராமேசுவரம் தாதா சிவராம பட்டர் புத்திரர் ரெகுநாத குருக்கள் 3. செப்பேட்டின் காலம் : சாலிவாகன சகாப்தம் 1685 சுவான ஆண்டு (கி.பி. 1763) 4. செப்பேட்டின் பொருள் : ரெகுநாத குருக்களுக்கு கோயில் மிராசு உரிமை வழங்கல் இந்த மன்னரது விருதாவளியாக ஐம்பத்து ஒன்பது சிறப்புப் பெயர்கள் இந்தச் செப்பேட்டில் கொடுக்கப்பட்டுள்ளன. இவைகளில் புவனேஸ்வரன் (வரி 5) பூபாலன், கோபாலன் (வரி 6) உபயசாமர உல்லாச நளினன் (வரி 8) என்ற நான்கு புதிய சிறப்புப் பெயர்களைத்தவிர ஏனையவை இவரது முந்தை யோரான சேதுபதி மன்னர்களது பட்டயங்களில் காணப்படுபவை. சேதுபதி மன்னரும், அவரது குடும்பத்தினரும் சேது யாத்திரைக்கு வரும் பொழுது தீர்த்தப் புரோகிதம் செய்து வைப்பதற்கு இராமேசுவரம் தாதா சிவராம படடர் புத்திரன் ரெகுநாத குருக்களுக்கு காணியாட்சி வழங்கும் தான சாதனம் இந்தச் செப்பேடு. மன்னரும் குடும்பத்தினரும் யாத்திரை மேற்க் கொண்ட பொழுது ரெகுநாத குருக்கள் பவித்ரம் வழங்கி இராமேசுவரம் வைரவ தீர்த்தம் முதல் தனுஷ்கோடி அனுப்பு தீர்த்தம் வரையான தீர்த்தக் கட்டங்களுக்கும் இராமநாத சுவாமி, பர்வதவர்த்தினியம்மன் சன்னதிகளிலும் தரிசனம், சிரார்தம்