பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/844

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செப்பேடு எண் 64 (விளக்கம்) 1. செப்பேடு வழங்கியவர் : முத்துராமலிங்க விஜயரெகுநாத சேதுபதி 2. செப்பேடு பெற்றவர் : சேஷ அவதானிமகன் சந்திர சேகர அவதானி 3. செப்பேட்டின் காலம் : சகம். 1685 சோபானு ஆண்டு பங்குனி மாதம் (கி.பி.1763) 4. செப்பேட்டின் பொருள் : அரியக்குடி கிராமம் மேள்படி அவதானியாருக்கு தானம். முந்தையச் செப்பேட்டில் குறிக்கப்பட்டவாறு பாலகரான இந்தச் சேதுபதி மன்னர் பெயரில் அரியக்குடி கிராமம் தானம் வழங்கப்பட்டுள்ளது. ஆதலால் இந்த மன்னரின் முந்தையோர் களது சிறப்புப் பெயர்கள் இந்த மன்னரது விருதாவளியாக இந்தச் செப்பேட்டில் கொடுக்கப்பட்டுள்ளன. அவைகளுடன் பலத்துக்கு ஆதிசேஷன், கனகோபாலன் தட்சணசிங்காகசன சேனாதிபதி என்ற மூன்று புதிய பெயர்களும் இந்த விருதாவளி யில் சேர்க்கப்பட்டுள்ளன. சந்திரசேகர அவதானி என்ற சான்றோருக்கு அரியக்குடி என்ற சிற்றுரினை சேதுபதி மன்னர் தானமாக வழங்கியதை இந்தச் செப்பேடு தெரிவிக்கின்றது. நிரம்பிய அறிவும் நிகரில் லாத இறையருளும் எய்தியவர்கள்தான் அரிய அவதானங் களைச் செய்து காட்ட முடியும். அவதானம் என்பது அதிசயிக் கத்தக்க கலையாகும். இறைவனின் அருட் கொடையுங்கூட மிகமிக வேகமாக செயல்படும் மனித நினைவாற்றலைக் கொண்டு கேட்போர் வினாக்களுக்கு இலக்கண இலக்கிய இலெளகீக சம்பந்தமான பதில்களை தயக்கமின்றி சரியாக