பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/850

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

540 எ ஸ். எம். கமால் சிறப்பை நாடறியச் செய்தார். இவரது பெயரில் வேள்விக் கோவை என்ற சிற்றிலக்கியம் இயற்றப்பட்டுள்ளதாகக் தெரி கிறது. இவரும், சிவகங்கைச் சீமையின் பிரதானியான தாண்ட வராய பிள்ளையும் உடன் பிறந்தார்களைப் போல ஒன்றுபட்டு இந்த இரண்டு சீமைகளின் நலனிற்காக உழைத்ததை கான் சாயபு சண்டை’’ என்ற நாடோடி இலக்கியவரிகளில் காணப் படுகின்றன. இராமநாதபுரம் கோட்டைக்கு தென்மேற்கே உள்ள தீயனுர் கிராமத்தைச் சேர்ந்த இவர் கி.பி. 1770ல் கொலை யுண்டு மரணமடைந்தார். இந்தச் சிறந்த பணியாளரது புண்ணிய மாக சேதுபதி மன்னர் நிலமழகிய மங்கலம் என்ற ஊரை இராமேசுவரம் திருக்கோயிலின் பூஜைக்கு நிவேதனமாக வழங் கியதை இந்தச் செப்பேடு புலப்படுத்துகிறது. இந்த நிலக் கொடையை பெற்றுக் கொண்டவர் இராமநாத பண்டாரம் என்று குறிப்பிட்டிருப்பதால் அன்றைய இராமேசுவரம் திருக் கோயிலின் நிர்வாகப் பொறுப்பில் அந்த ஆதீன கர்த்தர் இருந்து வந்ததையும் இந்தப்பட்டயம் புலப்படுத்துகிறது. கொடையாக வழங்கப்பட்ட நிலமழகிய மங்கலம் இன்றைய இராமநாதபுரம் மாவட்ட திருவாடானை வட்டத்தில் அமைந் துள்ளது. திருவாடானை நகருக்கு வடகிழக்கே எட்டுக்கல் தொலைவில் அமைந்துள்ள இந்த வளமையான ஊர் முந்தைய நிலப்பிரிவான அஞ்சுகோட்டை பற்றில் அமைந்திருந்த விவரத் தையும் (வரி 41) இந்தச் செப்பேட்டில் காணமுடிகிறது. அப் பொழுது அந்த ஊருக்கு நயமொழி மங்கலம்' என்ற நல்ல செந்தமிழ்ப் பெயர் இருந்ததை கல்வெட்டுச் செய்தியொன்று தெரிவிக்கின்றது. ஐம்பத்து எட்டு வரிகளைக் கொண்ட இந்த செப்பேட்டினை எழுதியவர் பெயர் வீரப்ப பண்டாரம் மகன் திருப்புல்லாணி. பிறப்பிலே பண்டாரமாக இருந்தாலும் இவரது குடும்பத்தினர் திருப்புல்லாணி ஆழ்வார் போல வைணவ ஈடுபாடும் திருப்புல் லாணி தர்ப்பாசன அழகியார் மீது கொண்ட பக்தியினாலும் அந்தத் திருத்தலத்தின் பெயரையே தங்களது குழந்தையின் இயற்பெயராகச் சூட்டினர் போலும். இன்றும் சிலர், தங்கள் பெயராக, காசி, மதுரை, நாகூர் என்ற ஊர்ப்பெயர்களைச் சூட்டிக்கொள்வது ஒப்புநோக்கத்தக்கது.