பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/855

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செப்பேடு எண். 66 (விளக்கம்) 1. செப்பேடு வழங்கியவர் : முத்துராமலிங்க விஜயரெகுநாத சேதுபதி 2. செப்பேடு பெற்றவர் : ரெங்கநாதபுரம் வெங்கிட நாராயண அய்யங்கார் சகம் 1690-78 விரோதி வருடம் ஆவணி மாதம் 21ந் தேதி (கி.பி. 6-9-1768) 4. செப்பேட்டின் பொருள் : வேதாளை கிராமத்தில் தண் - னிர் பந்தல் அன்னசத்திரம் நடத்த அனிச்சகுடி கிராமம் தானம். 3. செப்பேட்டின் காலம் இந்தச் செப்பேட்டை வழங்கிய சேதுபதி மன்னரது விருதா வளியாக அறுபத்து ஏழு சிறப்புப் பெயர்கள் இந்தச் செப்பேட்டில் இடம் பெற்றுள்ளன. அவைகளில் பரலோக தேவந்திரன், அநேக பிர்ம்ம பிரதிஷ்டாபகாரன் என்ற இரண்டு புதிய பெயர்கள் மட்டும் முந்தையச் செப்பேடுகளில் காணப்படாதவை. வேதாளையில் உள்ள அன்னதான மடம் தண்ணிர் பந்தல் அக்ரகார தர்மத்தைத் தொடர்வதற்காக ரெங்கநாதபுரம் வெங்கிட நாராயண அய்யங்காருக்கு அனிச்சகுடி கிராமத்தை மன்னர் தானமாக வழங்கியதை இந்தச் செப்பேடு தெரிவிக்கின்றது. வேதாளை என்ற கிராமம் இராமநாதபுரம் வட்டத்தில் மண்டபத் திற்கு அண்மையில் உள்ளது. இங்குள்ள வேதாள தீர்த்தத்தில் புனித நீராடிய சுதர்சனன் என்ற கந்தர்வன் சாப விமோசனம்