பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/856

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

546 எஸ். எம். கமால் பெற்றான் எனவும் அதன் காரணமாக இந்தத் தீர்த்தம் வேதாள வரத தீர்த்தம் என்ற பெயர் பெற்றதாகத் தெரிகிறது . இராமேசு வரம் திருக்கோயில் வளாகத்தில் உள்ள இருபத்து இரண்டு தீர்த்தங்களுடன் இராமேசுவரம் தீவை அடுத்துள்ள மண்டபி, வேதாளை, திருப்புல்லாணி, தேவிபட்டினம், திருப்பாலைக்குடி, உப்பூர் ஆகிய ஊர்களில் உள்ள அறுபத்து நான்கு தீர்த்தங்களில் புனித நீராடி நிர்மலம் பெறுவது ஐதீகம். இவைகளின் மொத்த எண்ணிக்கை ஐம்பத்து ஆறு எனவும், சில நூல்களில் குறிப்பிடப் பட்டுள்ளன. இவைகளில் பல காலப் போக்கில் மறைந்துவிட்டன. அவைகளின் பட்டியலில் இந்த வேதாள வரத தீர்த்தமும் அடங்கும். ஆனால் இந்தச் செப்பேட்டுக் காலத்திற்கு முன்னர் இந்தத் தீர்த்தம் சேதுயாத்திரை வரும் பயணிகளினால் மிகவும் பயன்படுத் தப்பட்டு வந்துள்ளது. அவர்களின் நலன் கருதி அங்கே தண்ணிர் பந்தலும் அன்னதான சத்திரமும் முத்து சாத்துக்குட்டி செட்டி மகன் முத்துக்கூரிசெட்டி என்பவரால் நிறுவப்பட்டிருந்தது. இந்தத் தர்மசீலரைப் பற்றிய விபரங்கள் கிடைக்கவில்லை. இவரது தந்தையின் பெயரிலிருந்து இவர் இராமநாதபுரம் சீமையில் வாழும் மஞ்சப்புத்துர் ஆயிர வைசிய பிரிவு செட்டிப் பிரமுகர் என்பது தெரியவருகிறது. ஏனெனில் இந்தச் சீமையில் தெலுங்கு பேசுகின்ற தேவாங்கர், கோமுட்டி, தமிழ்பேசுகின்ற நகரத்தார், வாணியர், வேளாண் மக்கள் சுந்தரம் என்ற இளமகர் பிரிவு களைச் சேர்ந்தமக்கள் செட்டி என்ற பெயர் விகுதியுடன் வழங் கப்பட்டு வந்துள்ளனர் என்றாலும் இந்த தருமத்தை நிறுவியவர் பெயர் 'முத்து சாத்துக்குட்டி' என்று குறிப்பிடப்படுவதில் இருந்து இவர் மஞ்சப்புத்துார் செட்டி என்பது தெரியவருகிறது. இந்தச் செப்பேட்டில் (வரி 29, 31) கண்டுள்ள செட்டி' என்ற சொல் மஞ்சப்புத்துார் செட்டி வகுப்பினரைக் குறிக்கின்றது. | தானம் வழங்கப்பட்டுள்ள அனிச்சகுடி கிராமம் இன்றைய இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை வட்டத்தில் ராஜசிங்க மங்கலத்துக்கு தென்மேற்கே உள்ளது. இந்தக் கிராமத்திற்கான -* 1. கல்யாணம் பிள்ளை M. A. - இராமேசுவரம் தல வரலாறு (1965) பக்கம் :