பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/863

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 553 மன்னர் தான பூருவமாக வழங்கியதை இந்தச் செப்பேடு சொல் கிறது. இந்தக் கிராமம் இன்றைய இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டத்தில் அமைந்துள்ளது. இதிகாச தொடர்புடை யதான இந்த ஊருக்கு அனுமன் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இராமகாதையை நினைவுபடுத்தும் பல ஊர்கள் இந்த வட்டாரத் தில் உள்ள்ன. இராமநாதபுரம், இராமேசுவரம், இரகுநாதபுரம் இரகுநாதமடை, அனுமந்தக்குடி, சத்ருக்கன் கண்டான் சேதுக் கரை, சேதுகால், கோதண்டராமன் பட்டணம், கோதண்ட ராமன் கோவில், தனு ஷ்கோடி, ராமநதி, வாலி நோக்கம், தர்ப்ப சயனம், என்பன அவை . இந்த நிலக்கொடை பெற்ற பதின்மரும் வேதவிற்பனர் கள். சாத்திரியார், வாத்தியார் என அவர்களது பெயர் விகுதி கள் தெரிவிக்கின்றன. இன்னும் இவர்களில் ஒருவரைத் தவிர (ஐயங்கார் மகன் சீனிவாசன்) ஏனைய ஒன்பதின்மரும் சிவப் பிராமணர்கள். ஆனால் இவர்கள் பெயர் அல்லது தந்தையார் பெயர் அனைத்தும் வைணவப் பெயர்களாக இருப்பது இங்கு குறிப்பிடத்தக்க தொன்று. இவர்களுக்கு தானம் வழங்கப்பட்ட ஊர்ப்பகுதிக்கு நான்கு எல்லைகள் விளக்கமாக இந்தச் செப்பேட் டில் கொடுக்கப்பட்டுள்ளன. புலங்களை எண்ணிட்டுக் குறிப்பிடும் வழக்கம் அப்பொழுது இல்லாத காரணத்தினால் நஞ்சை, புஞ்சை, நிலங்கள் சில, இடு குறிப்பெயராலும் வேறு சில உரி யவர் பெயராலும் குறிப்பிடப்பட்டதை செப்பேடுகள் (வரிகள் 25 40) தெரிவிக்கின்றன. குப்பைச் செய், காடு வெட்டி புஞ்சை, திருமேனிக்குடும்பன் புஞ்சை, விளாவடிப் புஞ்சை, அருளப்பன் புஞ்சை, பறையன் புஞ்சை, பொட்டப் புஞ்சை, புத்தன் புஞ்சை முத்தப்பன் புஞ்சை, என்பன அவை. கொத்து என்பது வட்டார வழக்கு. தொடர்ச்சி என்ற பொருள். அதேபோல குடும்பன் என்ற சொல்லும் இந்தப்பகுதியின் குடியினரான பள்ளர் சாதி: 'யினரில் ஒரு பிரிவை குறிக்கும் குழுஊக் குறி. இந்தச் சொல் வேறு எந்த ஆவணத்திலும் காணப்படவில்லை. வேறு பகுதி களிலும் 'குடும்பன் பள்ளரைக் குறிக்கும் வழக்கில் இல்லை. ரெகுநாத காவேரி என்பது குண்டாற்றில் இருந்து கமுதிக்கு கிழக்கே பிரியும் ஒருகால். மதுரை மாவட்டத்திலிருந்து