பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/864

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

554 எஸ். எஸ். கமால் புறப்பட்டு கிழக்கு நோக்கி ஓடிவந்து, கமுதிவழியாக தெற்கே மூக்கையூர் என்ற இடத்தில் கடலில் கலக்கின்ற இந்த ஆற் றினை, கமுதி அருகே அணைமூலம் தடுத்து கால்வாய் ஒன்றை விஜயரெகுநாத சேதுபதி புதிதாக அமைத்தார். அந்தக்காலின் பெயர்தான் ரெகுநாத காவேரியாகும். முதுகுளத்துார் பரமக்குடி, வட்டங்களில் உள்ள சுமார் 100 கண்மாய்கள் இந்த நீரால் பயன் படுவதுடன் குண்டாற்றில் பெருவெள்ளம் ஏற்படும்பொழுது, கமுதி நகருக்கு பேரழிவு ஏற்படாமலும் இந்தக்கால் உதவி வருகிறது.