பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 63 என்ற வரிப்பாடுகள் இந்த நூற்றாண்டிலும் இறுக்கப்பட்டு வந்தன. இவை தவிர அளக்கப்பட்ட சரக்குகள், எண்ணப்பட்ட சரக்குகள், நிறுக்கப்பட்ட சரக்குகள் என்ற இனங்களில் அள்ளுத்தீர்வை என்ற வரவினம் பெறப்பட்டது. இதனை இராமேசுவரம் திருக்கோயில் செப்பேட்டில் சற்று விளக்கமாகக் காண முடிகிறது. தவச தானியங்கள் அளக்கப்பட்டதெற்கெல் லாம் நூறு மரக்காலுக்கு ஒரு மரக்காலும் எண்ணெய் , தேன், நெய் ஆகியவவைகளுக்கு நூறு படிக்கு ஒரு படியும், எண்ணப் பட்டதற்கெல்லாம் நூற்றுக்கு ஒன்றே முக்காலும் நிறுக்கப்பட்ட சரக்குகளுக்கு நூற்றுக்கு ஒன்றேகால் பணமும், மகமையில் பத்துப் பொன்னிற்கு அரைப் பணமும்' என்ற நியதி ஏற்படுத்தப் பட்டிருந்தது. (செ. எண். 49) இந்த வரிப்பாடுகளையும் வரவினங்களையும் அமீல்தாரும்: சம்பிரிதியும் தண்டல்காரரும் நேரடியாகவும் ஆங்காங்கு அமைக் கப்பட்டிருந்த சுங்கச் சாவடிகள் மூலமும் வசூலித்து 'பொக்கிஷத் துக்கு செலுத்தினர். இவை தவிர கீழக்கரை, தொண்டி, அக்கினி தீர்த்தக்கரை, புங்கடி, புளியடி, பாம்பன் துறைகளில் வந்து இறங்கிய, ஏற்றி அனுப்பிய, சரக்குப் பொதிகளுக்கும் அரண்மனைத்தீர்வை வசூலிக்கப்பட்டது. ஆனால் அவைகளுக் கான விவரம் கிடைக்கவில்லை. விவசாயம் சம்பந்தப்பட்ட தீர்வைகள் தவிர ஏனையவை சுழிப்பணம், மின்னல்பணம், (செப்புக் காசுகள்) , பொன் (பொன் நாணயம்) ஆகியவைகளில் செலுத்தப்பட்டன. இந்த நாணயங் கள் இராமநாதபுரத்தில் அமைந்திருந்த நாணயசாலையில் தயாரிக்கப்பட்டன. இந்த நாணயங்கள் தவிர, மறவர் சீமையில் மிகுதியாக வணிகத் தொடர்புகள் கொண்டு இருந்த பரங்கியர் களில் குறிப்பாக டச்சுக்காரர்களது போர்ட்டோ நோவா பக்கோடா என்ற பொன் நாணயமும் செலாவணியில் இருந்து வந்துள்ளது பதினெட்டாம்நூற்றாண்டின் பிற்பகுதியில், ஆற்காட்டு நவாப்பின் வெள்ளி ரூபாயும் செலாவணியில் இருந்தது. "-- காணிக்கை வரி பக்தி மேலிடு காரணமாக தங்களது அரிய பொருள்களைத் இறையன்பர்கள் திருக்கோயில்களுக்கு அன்பளிப்பாக வழங்குவது காணிக்கை ஆகும். வடமாநிலங்களிலுள்ள இளம் பெண்கள்