பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/875

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செப்பேடு எண் 69 (விளக்கம்) 1. செப்பேடு வழங்கியவர் : முத்துராமலிங்க விஜய ரெகு நாத சேதுபதி 2. செப்பேடு பெற்றவர் : திருப்பெருந்துறை திருக் கோயில் 3. செப்பேட்டின் காலம்

ಶ್ಗ சகாப்தம் 1703 லவ ஆண்டு ஷ் மாகம் (கி.பி. 1781) த னு ஷ த மேற்படி கோயில் உச்சிக்காலக் கட்டளைக்கு சில சுதந்திரங் களை வசூலித்துக் கொள்ளும் உரிமை. 4. செப்பேட்டின் பொருள் இந்தச் செப்பேட்டை வழங்கிய சேது மன்னரது விருதா வளியாக குறிப்பிடப்பட்டுள்ள முப்பத்து மூன்று சிறப்புப் பெயர் களும் முந்தையப் பட்டயங்களில் காணப்பட்டவை. திருப்பெருந்துறை ஆவுடைய பரமசுவாமி திருக்கோயிலில் தேவர் கட்டளை என்ற உச்சிக் காலக் கட்டளை சிறப்பாக நடை பெறுவதற்கு உதவியாக விளானூர், இடையூர், சிறுகனுார், பூத குடி கோடிக்குளம் ஆகிய கிராமங்களும் ஆவுடையார் கோயில் கிராமத்" தில் உள்ள தென்னந்தோப்புக்கள், நஞ்சை புஞ்சைகள் மனை நிலம் ஆகியவை சேது அரசர்களால் ஏற்கனவே சர்வமான்யமாக வழங்கப்பட்டிருந்தன. இந்தக் கிராமங்களிலிருந்து மன்னருக்குச் செலுத்த வேண்டிய சுங்கம், மகமை, காடுகாவல்வரி, உள்ளுர் வரி, சாணார் வரி, இடங்கை வரி, வலங்கை வரி உட்பட்ட பதினெட்டு வகை வரிகளை திருவாவடுதுறை ஆதின கர்த்த வசூலித்துக் கொள்ள இந்தச் செப்பேட்டில் ஆணை வழங்கப் பட்டுள்ளது.