பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/887

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 577 புரம் பாதை ஆகியன அனைத்தும் இன்னும் வழக்கில் உள்ளன. சேதுக் குடும்பன், அடைக்கலன் குடும்பன், ஆதிநாராயணக் குடும்பன் ஆகியோர் பள்ள இனத்தவரில் ஒரு பிரிவினரான குடும்பன் வகையைச் சேர்ந்தவர்கள். பதினாறாம் நூற்றாண் டுத் தொடக்கத்தில் இந்தப் பகுதி பரமக்குடி பாளையத்துடன் இணைந்து தும்பிச்சி நாயக்கரது ஆட்சியில் இருந்ததால், இந்தப் பகுதியில் சில ஊர்களில் தெலுங்கினைத் தாய்மொழியாகக் கொண்ட நாயக்கர்’ சிலர் நிலைத்து வாழ்ந்தனர். செப்பேட் டின் வரி 30, 31ல் குறிப்பிடப்படுகின்ற எத்திலு நாயக்கன் மாலையீட்டு ஊரணி ரெகுநாத நரயக்கன் பொட்டல் செய் என்பன அவர்களின் எச்சங்கள். 20-ஆம் தூற்றாண்டில் இலங்கையைக் கைப்பற்றிய ஆங் கிலேயர் கண்டி அரசரைச் சிறைப்படுத்தி வேலூர்க் கோட்டை யில் அடைத்தனர். அவரது மகன் பங்காருசாமி மற்றும் பன்னி ரெண்டு உறவினர்கள் அரசியல் பென்ஷனர்களாக கீழக்கரை யிலும் சிக்களிலும் வாழ்ந்து வந்தனர் என்பதும் அவர்களுக்கு சிக்களில் சொந்தமான இடங்கள் இருந்து வந்ததும் தெரிய வருகின்றது. பொட்டல்செய், புஞ்சைக்காடு, கண்மாய் உள் வாயில், பிறகரை, கண்மாய் வெட்டு, கேணிப்பிறம்பு என்பன இந்த வட்டாரத்தின் வழக்குகள் ஆகும். kTTMATTATTATAAA AAAAA ---- اٹشت - تات تسنسّستدتست سائٹ wFfV-E | Tamilnadu Archives Records - Madura Dist. Vol. 4670 (1872) pp. 170-171, Vol. 1159 (1812) pp - 13.