பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் Ᏺ R இளைஞன் ஒருவனை வலையர் சமூகத்தைச் சேர்ந்த வீராயி என்ற கன்னி களவு மணத்தில் கலந்து கர்ப்பவதியானாள். அவளது உறவினர்கள் அவளைத் துன்புறுத்திக் கொன்றதுடன் அவளது காதலனின் உடன்பிறந்தாளைப் பலிக்குப் பலியாகப் பெற்றனர். அத்துடன் உடையக்காள் என்ற அந்தக்கன்னியை கி.பி. 1691ல் உயிருடன் எரித்துக் கொள்ளவும் முயன்றனர். இந்த செய்தியை பட்டயம் ஒன்றில் அறிகின்றோம். (செ.எண் 85). 19 2. இன்னொரு பட்டயம் முன்பின் சாதிக்கு இல்லாத காரியங்கள் வந்தாலும் ... ... ... , நாங்கள் அனைவரும் கூடி சாதிக்குப் புறம்பிட்டு கண்ணும் பறித்து தேசங்கடத்தி விடக்கவோமாகவும் . என சாதியின் பெயரால் இழைக்கப்படும் இன்னல்களுக்கு இசைவு தரும் பிடிபாடாக அமைந்துள்ளது. மறவர் சீமையில் கி.பி. 1707 முதல் கி.பி. 1712 வரை கிறிஸ்துவ சமயப்பணியில் ஈடுபட்டிருந்த ஜான் மார்ட்டின் என்ற பாதிரியரது கடிதங்களும் இந்தச் சீமைமக்களின் மனத்தடியில் மறைந்திருந்த கொடுமை களின் கோரவடிவினைக் கோடிட்டுக் காட்டுகின்றன." மறவர் சாதியைச் சேர்ந்த இரண்டு குடும்பக்களுக்கிடையே ஏற்பட்ட சச்சரவில் ஒரு குடும்பத்தினர் பாதிக்கப்படும் பொழுது எதிராளியான குடும்பத்தினர் தங்களது குழந்தையைக் கொன்று பழிக்குப் பழி தீர்க்கும் வழக்கத்தைப் பார்த்துப் பதைபதைத்த அந்தப் பாதிரியாராது குறிப்புகளில் காணப்படுகின்றன. 3. சேதுபதி மன்னர்கள் மக்களுக்குப் பயன்படுமாறு அன்னசத்திரங்களையும் மடங்களையும் அமைத்த போதிலும் இத்தகைய சாதிப்பிடிப்பின் காரணமாக பிராமணர்களுக்கு மட்டும் திருப்புல்லாணி புருசோத்தம பண்டித சத்திரத்தில் உணவு அளிக்கவும், தனுஷ்கோடி, இராமநாதபுரம், அத்தியூத்து, தேர்போகி, சுந்தரபாண்டியன் பட்டணம் ஆகிய ஊர்களில் அவர் களுக்கென்று தனியான குடியிருப்புகளை அமைப்பதற்கும், காணி களையும் ஊர்களையும், தனியாக வழங்கியிருப்பது தெரிய வரு கின்றது. சேரவாரும் ஜெகத்திரே' என அனைத்து ஆன்மீக 19. Madura mission Dossiers. Vol, Il. (1709) 20. தமிழக தொல் பொருட்துறை இதழ். 'கல்வெட்டு' எண். 22 (மே. 1989)