பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/892

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செப்பேடு எண் 72 (விளக்கம்) 1. செப்பேடு வழங்கியவர் : முத்துராமலிங்க விஜயரெகுநாத சேதுபதி 2. செப்பேடு பெற்றவர் : புருஷோத்தம பண்டிதர் செப்பேட்டின் காலம் : சகம் 1703 பிலவ ஆண்டு தை மீ" 15 தேதி (கி.பி. 24-4-1782) 4. செப்பேட்டின் பொருள் : நாகாச்சி மடதர்மத்திற்கு பேய் ராமத்தேவனேந்தல் தானம் இந்தச் செப்பேட்டை வழங்கிய முத்துராமலிங்க சேதுபதி மன்னரது விருதாவளியாக இந்த செப்பேட்டில் முப்பத்து ஒன்பது சிறப்புப்பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இந்தச் செப்பேட்டை சேதுபதி மன்னர் நாகாச்சி மடதர்மத் திற்காக பேய்ராமத்தேவனேந்தல் என்ற ஊரினை தானமாக புருஷோத்தம் பண்டிதர் என்பவர் கையில் கொடுத்ததாகத் தெரிகிறது. இராமேசுவரம் தலயாத்திரை வருகின்ற பக்தகோடி கள் வடக்கில் இருந்து வந்து வங்கக்கடற்கரையில் உள்ள ஆத்தங்கரைச் சத்திரத்தில் தங்கியபிறகு கிழக்கு நோக்கி கடற் கரை வழியாக பிள்ளைமடம் சத்திரத்தைக் கடந்து மண்டபம் தோணித்துறைக்குச் செல்லுதல் வேண்டும். ஆற்றங்கரை சுழி முகத்தில் வைகையாறு சங்கமிப்பதால் முகத்துவாரத்தை கால் நடையாக கார்காலத்தில் கடப்பது ஆபத்தாக இருந்து வந்தது இதனைத் தவிர்ப்பதற்காக கிழக்கே செல்லாமல் ஆற்றங் கரையில் தெற்கே சிறிது தொலைவு சென்று வைகையாற்றைப் படகு மூலம் கடப்பது எளிதாக இருந்தது. அவ்விதம் வருபவர் களுக்கு நாகாச்சிமடம் மிகவும் பயனுள்ள தங்குமிடமாக அமைந்