பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/893

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 583 - - - - === திருந்தது. அங்கு களைப்பாறும் பயணிகளுக்கு உணவு இருப்பிட வசதி கொடுப்பதற்காக சேதுபதிமன்னர் இந்த தானத்தை வழங்கியுள்ளார். இந்த மடம் இப்பொமுது இல்லை. தானம் வழங்கப்பட்ட பேய்ராமத் தேவனேந்தல் முந்தைய கைக்கி நாட்டும்பிரிவிலிருந்தது. இன்றைய இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டத்தில் வைகையாற்றின் வடபகுதியில் திருச்செந்துார் பிள்ளைத் தமிழ் பாடிய பகழிக் கூத்தரது கிராம மான சன்னாசிக்கு அண்மையிலுள்ளது. தானம் வழங்கப்பட்ட ஊரிலிருந்து சேதுபதி மன்னருக்கு இறுக்கப்பட்ட நிலவரி, இடங்கைவரி, வலங்கை வரி, கீதாரம் கரைமணியம், ஆதடை மற்றும் பல சுதந்திரங்களும், இந்த மடதர்மத்திற்காக மன்னர் விட்டுக்கொடுத்துள்ளார். இந்த ஊருக்கான பெருநான்கெல் கை கொடுக்கப்பட் டுள்ளது. குறிப்பிடப்பட்டுள்ள பெரியானேந்தல் தவளைக்குளம், தேத்தாங்கால், சித்தனேந்தல் அக்கிரமேசி, அஞ்சாமடை ஆகிய அனைத்து ஊர்களும் இன்னும் உள்ளன. செப்பேட்டில் காணப்படும் மூலக்கரை, பிரகரை, கரையடி கடைக்கொம்பு, வெட்டுத்தாவு, பாகை, பறம்பு, புறவு, ஏந்தல் ஆத்துக்கால், ஊத்துக்கால், ஆகியன வட்டார வழக்குகள் ஆகும்.