பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/904

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59 4 எஸ். எம். கமால் ஆகும். இந்த ஊரின் ஒருபாதி ஏற்கனவே தானமாக வழங்கப் பட்டுவிட்டதால், இந்தச் செப்பேடு பெற்றவர் இந்த கிராமத்தின் மற்றொரு பாதியினைத்தான் பெற்றார் என்பது வரி 30/33ல் இருந்து தெரியவருகிறது. அந்தப்பகுதி எது என்பதும் அதனைப் பெற்றவர் யார் என்பதும் அறியத்தக்கதாக இல்லை. அத்துடன் இந்த ஊரில் இருந்து எத்தகைய வரிப்பாடுகள் மன்னரது கடமையாகப் பெறப்பட்டது என்பதும் தெரியவில்லை. ஆதலால் தானம் வழங்கப்பட்ட பாதிப்பகுதி முழுவதும், விளை நிலங்களை மட்டும் கொண்டது என்பதனை வரி 35 லிருந்து ஊகிக்க முடிகிறது.