பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 67 சேதுபதி மதுரைச் சீமையை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த கன்னடப் படைகளை முறியடித்து மதுரை நாயக்கர் பேரரசை நிலைகுலையாது காப்பாற்றினார். இந்தமகத்தான உதவியினால் மனம் நெகிழ்ந்த திருமலைநாயக்கர் சேதுபதி மன்னரை பலவாறு பாராட்டிச் சிறப்பித்ததுடன் அவரது அன்பளிப்புகளில் ஒன்றாக பொன்னாலான அம்பிகையின் திருமேனி ஒன்றையும் வழங்கி யிருந்தார். இராமநாதபுரம் அரண்மனையில் தனிக்கோட்டம் நிறுவிஅம்மனை வழிபாடு செய்துவந்த அரசர் அந்த அம்மனுக்கு ஆண்டுதோறும் புரட்டாசி திங்களில் தசரா பெருவிழா இராமநாதபுரம் நகரில் நிகழ்வுறவும் ஏற்பாடு செய்தார். இதுவே மகர் நோன்பு விழாவாகும். அதுவரை இந்த தசரா விழா மதுரை நகரில், மட்டும் கோலாகலமாக நடைபெற்று வந்தது. பத்துநாட்கள் வரைத் தொடர்ந்த இந்த சமயத் திருவிழா சிறந்த கலைவிழாவாகவும் அண்மைக்காலம் வரை சேதுபதி தலைநகரில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வந்தது. தமிழ் புலவர்களும் வடமொழி வித்தகர்களும் ஆடல்பாடல் வல்லுநர் களும் இந்தவிழா நாட்களில் சேதுபதி மன்னர் முன் தங்களது திறமைகளைக் காண்பித்துப் பாராட்டும் பரிசுகளும் பெற்று வந்த னர். கொற்றவையின் கோர மூர்த்தமான இந்த அம்பாளுக்கு வாமபூஜையில் பலியிட மக்கள் கால்நடைச் செல்வங்களைக் காணிக்கையாக வழங்கினர். இத்தகைய கால்நடைகளின் மீது * மகர் நோன்புக் கிடாய் வரி' ஒன்று விதித்து வசூலிக்கப்பட்டது. மற்றொரு விழாவான மகாநவமிக்கும் ஆட்டுக்கிடாய்கள் விற் பனையில் இருந்து 'மகாநவமிக் கிடாய் வரி வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த விழா இன்று மக்களால் கொண்டாடப்படவில்லை. என்றாலும் பதினேழு, பதினெட்டாம் நூற்றாண்டுகளில் சேதுபதி மன்னரது வாணிப சலுகைகளைப் பெற்றுவந்த டச்சுக்காரர்கள் ஆண்டுதோறும் இந்த விழாவின் பொழுது சேதுமன்னருக்கு உயர்ந்த அன்பளிப்புகளைஅளித்து வந்த செய்திகளிலிருந்து இந்த விழா இங்கு கொண்டாடப்பட்டது உறுதிப்படுகின்றது. கடமையின் முன்னால் அன்றைய தமிழ்ச்சமுதாயம் பிராமணர், வைசியர், சத்திரியர், சூத்திரர் என்ற நான்கு பெரும் பிரிவுகளைக் கொண் டிருந்தது. பூவுலகத்தின் தேவர்கள் (பூசுரர்) என ஏனைய பிரி