பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/919

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.ே சதுபதி மன்னர் செப்பேடுகள் 609 யாக வைக்கப்பட்டிருந்தார். அவரது முதல் மனைவி இராஜேஸ் வரி நாச்சியாரும் அவரது ஒரேயொரு பெண் குழந்தையும் இராமநாதபுரம் அரண்மனையில் இருந்தனர். அவரது இரண்டா வது மனைவி வீரலட்சுமி நாச்சியார் செயின்ட் ஜார்ஜ் கோட்டை யில் மன்னருடன் வாழ்ந்து கருவுற்ற நிலையில் அவருக்கு பரிந் துரையாக இந்தச் செப்பேட்டினை மன்னர் வரைந்துள்ளார். ஆங்கிலேயரது அரசியல் நலன்களுக்கு எதிராக செயல் பட்ட காரணத்தினால் 7-05-1795ம் தேதியன்று அவர்கள் தி. ரென இராமநாதபுரம் அரண்மனையைக் கைப்பற்றி மன்னரைப் பதவி நீக்கம் செய்தனர். அத்துடன் சிறையிலும் இட்டனர். தொடர்ந்து எட்டு ஆண்டுகள் இராமநாதபுரம் சீமையை அவர் களது நேரடி ஆட்சியில் வைத்திருந்துவிட்டு, கி.பி. 1803ல் மன்னரது தமக்கையார் மங்களேஸ்வரி நாச்சியாரை மறவர் சீமையின் ஜமீன்தாரினியாக நியமனம் செய்தனர். ஆங்கிலேயரது பாதுகாப்புக் கைதியாக இருந்த காரணத் தினால் சேதுபதிகளது வழக்கமான விருதாவளிகளெதுவும் இந்த செப்பேட்டில் குறிப்பிடபடவில்லை. செப்பேடு வரி ஒன்றில் இராமநாதபுரம் சீமைக்குப் பதில் இராமநாதபுரம் ஜெமீன் என்று குறிப்பிடப்பட்டிருப்பதும் இந்த காரணத்தினால் தான். மற்றும் வழக்கமான செப்பேட்டு மங்கலச்சொல், சக ஆண்டுக் காலக்கணக்கு ஆகியவைகளும் இந்தச் செப்பேட்டில் காணப் படவில்லை. மன்னரது உடல்நிலை சீராக இல்லையென்ற காரணத்தி னால் அவர் இறப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் இந்தச் செப்பேட்டில் கையெழுத்திட்டுள்ளார். அத்துடன் சிறையிலிருந்து விடுதலை பெறுவோம் என்ற நம்பிக்கையும் அவரிடம் இல்லை. ஆதலால் அவரது வாரிசான வீரலட்சுமி நாச்சியாரது குழந் தையை அவரது தமக்கை பராமரித்து வளர்ப்பார் என்ற நம்பிக் கையும் இந்தச் செப்பேட்டு வாசகத்தில் பிரதிபலிக்கின்றது. தமது குழந்தைக்கான பற்றுக்கோலாக வீரலட்சுமிநாச்சி யார் இந்த ஆவணத்தை மன்னரிடமிருந்து பெற்றதும் அவர் இராமநாதபுரத்திற்கு உடனே திரும்பவில்லை. தமது துணைவ