பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/922

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61.2 எஸ். எம். கமால் 12. 13. 14. 15. 16. 17. 18. 19. 20. 21. 22. -- ----- கிழக்கு தெய்வச்ச நல்லூர் காலுக்கும் மேற்கு கடம்பன் குடிக்கு குடவேலிக்கும் தெற்கு இன்னான்கு எல்கைக்குட்பட்ட மேலச்சீத்தையும் அது உண்டாகிய நஞ்சை புஞ்சை மாவடை மரவடை மேல்நோக்கிய மரம் கீழ்நோக்கிய கிணறும் குடிபடை பள்ளு, பறை சகலமும் சர்வமானியமாக இராமநாத பண்டாரம் பாரிசமாக கட்டளை யிட்ட படியினாலே சந்திராதித்த காலம் வரையிலும் ஆண்டனுபவித்துக் கொண்டு தர்மம் நடத்தி வரக் க-வோமாகவும் இந்த தர்மம் யாதாமொருத்தர் பரிபாலனம் பண்ணினபேர் சிவலிங்கப் பிரதிட்டை பண்ணின தர்மத்தை அடைவா ராகவும் இந்த தர்மத்திற்கு - அகிதம் பண்ணினபேர் கெங்கையிலும் சேதுவிலும் காராம் பசுவையும் மாதா பிதாவையும் பிராமணரையும் வதை பண்ணின தோஷத்திலே போகக் கடவாராகவும் இப்படி சம்மதித்து ரெகுநாதத் தேவர் பத்தினியாகிய காதலிநாச்கியார் பண்ணின தர்மத்துக்கு தான சாசனப் பட்டயம் கொடுத்தோம் ராம லிங்கம் துணை