பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/923

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செப்பேடு எண் 78 (விளக்கம்) 1. செப்பேடு வழங்கியவர் : ரெகுநாத சேதுபதி காத்த தேவர் தர்மபத்தினி காதலி நாச்சியார். 2. செப்பேடு பெற்றவர் : இராமேசுவரம் இராமநாத சுவாமி திருக்கோயில். 3. செப்பேடு பெற்றநாள் : சாலிவாகன சகாப்தம் 1615 பரீம்க வருடம் தை மாதம் (கி. பி. 1693) 4. செப்பேட்டின் பொருள் : இராமேசுவரம் இராமநாத சுவாமி திருக்கோயில் அறைக் கட்டளைக்குமேலச்சீத்தை என்ற கிராமம் தானம். இந்தச் செப்பேடு இராமநாதபுரம் சேதுபதி மன்னரது மனைவி காதலி நாச்சியாரால் வழங்கப்பட்டிருப்பதால் மன்னரது ஏழு விருதுகள் மட்டும் இந்தச் செப்பேட்டில் கொடுக்கப்பட் டுள்ளன. அரசர்கள் மட்டுமல்லாமல் அரசரது பிராட்டிகளும் தான சாசனங்கள் வழங்குவது தமிழக அரசியலில் ஒரு மரபாக இருந்து வந்ததை சோழ, பாண்டிய, நாயக்க வரலாறுகள் தெரிவிக்கின்றன. ஆனால் சேதுபதிகளது அரச பிராட்டிகள் இத்தகைய செப்பேடுகளை முன்னர் வழங்கியதற்கான செய்திகள் எதுவுமில்லை. அந்த வகையில் இதுவே முதல் செப்பேடாகும். இந்தச் செப்பேட்டினை வழங்கிய காதலி நாச்சியார், ரெகுநாத கிழவன் சேதுபதியின் இரண்டாவது மனைவியாகும். இந்தப்பெயர் அரிதாக பெண்களுக்குசூட்டப்பட்டிருக்கிறது. மலை யரசன் மகளாக இருந்து தவம் புரிந்து தனது மனம் நிறைந்த