பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/930

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செப்பேடு எண் 79 (விளக்கம்) 1. செப்பேடு வழங்கியவர் : ரெகுநாத சேதுபதி காத்ததேவர் தர்மபத்தினி காதலி நாச்சியார் 2. செப்பேடு பெற்றவர் : வீரமநல்லூர் வெங்கடேஸ்வரய் யன் புத்திரன் சங்கர நாராய ணய்யன் 3. செப்பேட்டின் காலம் : சாலிவாகன சகாப்தம் 1631 விரோதி ஆண்டு கார்த்திகை மாதம் (கி.பி. 1709) 4. செப்பேட்டின் பொருள் : தனுஷ்கோடியில் அக்ரகாரத்திற் காக கிராமம் தானம். இந்தச் செப்பேட்டை வழங்கியவரது கணவர் ரெகுநாத கிழவன் சேதுபதி மன்னரது அறுபத்தியிரண்டு சிறப்புப் பெயர் கள் விருதாவளியாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இவைகளில் பூர்வதட்சணபட்சிம உத்தர சதுர் சமுத்ராதிபதி நவகண்ட சக்கரவர்த்தி ஆகிய இரண்டு எளிருதுகள் புதியவனாவாக இந்தச் செப்பேட்டில் பயன்படுத்தபட்டுள்ளன. இவை இரண்டும் விஜயநகர மன்னர்களால் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டவை. இராமேசுவரம் தனுஷ்கோடிக் கரையில் அக்ரகாரத் தர்ம மாக இராமநாதபுரம் சீமை தேர்போகி நாட்டு களத்துார் கிரா மத்தின் ஐம்பத்து ஐந்து கன பாகம் மட்டும் சங்கர நாராயண அய்யனுக்கு தானமாக வழங்கியதை இந்தச் செப்பேடு தெரிவிக் கின்றது. இதனை வழங்கியவர் ரகுநாத கிழவன் சேதுபதி மன்னரது மனைவி காதலி. இன்றைய பசும்பொன் முத்து ராமலிங்கம் மாவட்டம் தேவகோட்டை வட்டத்தில் இந்தக்கிரா மம் அமைந்துள்ளது. இந்தக் கிராமத்தின் பளவரி, பல்வரி,