பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/931

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 621 - --- --- மடத்துவரி, செம்பு வரி, காணிக்கை வண்டிமாடு, கோட்டிய எருது, சுரபிப் பசு, பேடி, விளாடம், நீரானிக்கம் என்ற வரிப் பாடுகள் இருந்தவிபரமும் தெரிய வருகிறது. இவைகளில் பள வரி, பல்வரி, மடத்துவரி, கோட்டிய எருது என்ற வரிப்பாடுகள் இராமநாதபுரம் சீமையின் பிற்பகுதிகளில் இருந்து வந்ததை முந்தையச் செப்பேடுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால் சுரபிப்பசு, பேடி, விளாடம், நீராணிக்கம் என்பன தேர்போகி நாட்டில் மட்டும் இறுக்கப்பட்ட வரிகள் என தெரியவருகிறது. பால்சுரக்கும் பசு சுரபிப்பசு, மலடாக்கப்பட்ட எருது பேடி காளைமாடுகளின் கால் நகத்தில் பூட்டப்படுவது விலாடம் நீரி லிருந்து பெறுகின்ற மலர், இலை, கிழங்கு போன்றவை நீரா ணிக்கம்; மாடுகளுக்கான வரி விதிப்பு ஒரே சீராக இல்லாமல் அவைகளின் பயன்பாட்டுக்கு தக்கவாறு வரிவிதிப்பு ஏற்படுத்தப் பட்டிருந்தது. அதனால் கறவைப்பசு, வண் டிமாடு, மலடாக்கப் பட்ட எருது, என அவைகள் வகைப்படுத்தப்பட்டன. கி. பி. 1291ல் பாண்டி நாட்டிற்கு வருகை தந்த உலகப் பயணி மார்க்கோ போலோ குதிரைகளுக்கு விலாடம் கட்டக் கூடியவர்கள் தமிழ்நாட்டில் இல்லையென்பதாக அவரது பயணக் குறிப்புகளில் வரைந்து வைத்துள்ளார். ஆதலால் பதிமூன்றாம் நூற்றாண்டில் பாண்டிய நாட்டுடன் பெருமளவில் குதிரை வணிகம் செய்த அரேபிய முஸ்லீம்கள் மூலம் விலாடம் கட்டும் பழக்கம் முதலில் குதிரைகளுக்கும் பின்னர் எருதுகளுக்கும் ஏற்படுத்தப்பட்டு இருத்தல் வேண்டும். விலாடம் கட்டும் தொழிலுக்கு வரி விதிப்பு ஏற்பட்டதை இந்த ஒரு செப்பேட்டில் தான் காணமுடிகிறது, - தானமாக வழங்கப்பட்ட பிறகு இந்த களத்துாரின் பெயர் ரெகுநாத ராய காதலி ஆயிபுரம் என வழங்கப்பட்டது. சேதுபதி மன்னரது மனைவி என்ற முறையில் தானம் வழங்கிய வர் காதலி நாச்சியார் ஆனாலும் அவரது இயற்பெயர் காதலி ஆயி என்பது. ஆபி என்ற விகுதி கள்ளர், மறவர் இன பெண்மணிகளைக் குறிப்பதாகும்.