பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/936

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 626 கிடாரம் கொண்டான் என்ற மறவர்சீமை ஊரினைச் சேர்ந்த சாந்தப் பிள்ளை மகன் சர்க்கரைப் புலவருக்கு கோடகுடி கொந்தலான் வயல் என்ற ஊரினை தானம் வழங்கியதை இந்தச் செப்பேடு தெரிவிக்கின்றது. இந்தப்புலவரது இயற்பெயர் அறியத் தக்கதாக இல்லை. இவரது கண்டிலும் இனிய கம்பராமாயண சொற்பொழிவுத் திறனுக்காக சர்க்கரை என்ற இனிய பெயர் இவருக்கு வழங்கப்பட்டது. சேதுபதி மகிழ் சர்க்கரை கவிராஜ சிங்கம் என்ற புலவரது சீட்டுக் கவித்தொடர் இதனை உறுதிப் படுத்துகிறது. ஏற்கனவே இந்தப் புலவருக்கு சேதுபதி மன்னர் உளக்குடி என்ற ஊரினை முற்றுாட்டாக வழங்கி இருந்தார். இராமேசுவரம கோயில் இராமநாதசுவாமி திரு முன்னர் கம்ப இராமாயண சொற்பொழிவினை மிகச் சிறப்பாக இராம பட்டாபிஷேக நிகழ்ச்சியுடன் முடித்த பொழுது, அறிஞர் பெரு மக்கள் கூடியிருந்த அந்த அவையில் இந்த தான சாசனம் வழங்கப்பட்டு புலவர் சிறப்பிக்கப்பட்டதை இந்தச் செப்பேடு தெரிவிக்கின்றது. (வரி 23-24) திருமலை ரெகுநாத சேதுபதி ஆட்சிக் காலத்திலிருந்து தமிழ்ப்புலவர் பெருமக்களது கொடை மடமாக சேதுபதி ஆதீனம் விளங்கி வந்துள்ளது. புத்தம் புதிய இலக்கியப் படைப்புகளுக்காக புலவர்கள் பல ஊர்களை பரிசி லாகப் பெற்றனர். ஆனால் கன்னல் தமிழில் கேட்போர் சிந்தை யும் செவியும் இனிக்கும் கம்ப இராமாயண சொற்பொழிவுக்கு ஊரினை பரிசிலாக வழங்கிய ஒப்புவமை இல்லாத தமிழ் உள்ளம் சேதுமன்னர்களுக்கு மட்டும் தான் இருந்தது. முன்னுறு ஆண்டுகட்கு முன்னர் கம்ப மகா கவியின் காவியம் எந்த அளவில் சேதுநாட்டில் போற்றப்பட்டது என்ப தற்கு சிறந்த சான்றாகவும் இந்த தானம் அமைந்துள்ளது. இந்தப் புலவர் திருச்சீர் அலைவாய் முருகன் மீது திருச்செந்துார் கோவை ஒன்றையும் படைத்துள்ளார். இவரது வழியினர் அனை வருமே புலவர்களாக விளங்கி வந்துள்ளனர். தானமாக வழங்கப்பட்ட கோடகுடி கொத்தலான் வயல் கிராமம் இன்றைய திருவாடனை வட்டத்தில் கொட்டகுடி என்ற பெயரில் வழங்கி வருகிறது. இந்தச் செப்பேட்டின் காப்புரையில் (வரி 34-37) ராமசுவாமி சரித்திரத்தை யசாத்தியமாக நினைத் தவர்கள்' என்றும் இராமாயணத்தை கேள்வியானவர்கள் எந்தப் பலனை அடைவார்களோ' என்றும் குறிப்பிட்டிருப்பது ஒரு புதுமையான காப்புரை ஆகும். *