பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/937

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செப்பேடு எண். 81 (விளக்கம்) 1. செப்பேடு வழங்கியவர் : முத்து வயிரவநாதத் தேவர் 2. செப்பேடு பெற்றவர் : அழகர்மலை திருமலையாண்ட திருவேங்கடாச்சாரியார் 3. செப்பேட்டின் காலம் : சகம் 1634. நந்தன ஆண்டு ஆஷாட மாதம் (கி.பி. 22-07-1712) 4. செப்பேட்டின் பொருள் : அழகர் மலையில அன்ன தானம் ஊரணி தர்மங்களுக்கு கிராமங்கள் தானம் இந்தச் செப்பேட்டினை வழங்கியவர் முத்து விஜய ரகுநாத சேதுபதியின் சகோதரர் முத்து வயிரவநாதத்தேவர் ஆவார். இவர் திரு. உத்தரகோசமங்கை கடம்பத்தேவர். மகனும் முத்து விசயரகுநாத சேதுபதி மன்னரது தமையனார் என்பதை செப் பேட்டின் வரி 7 புலப்படுத்துகிறது. இவரது பதவியைப் பற்றிய விவரம் எதுவும் தெரியாவிட்டாலும் அன்றைய அரசு நிர்வாகத் தில் பல புதிய மாறுதல்களைப் புகுத்திய முத்து விசைய ரெகு நாத சேதுபதி மன்னர் தமது அதிகார வரம்புகளை பரவலாக்கி தமது சகோதரருக்கும் உயர் பதவி ஒன்றினை வழங்கியிருக்க வேண்டுமென ஊகிக்கப்படுகிறது. அழகர் மலையில் அன்னதானம் மேற்கொள்ளவும் அங்கு வருகை தருகின்ற பயணிகளுக்கு உபயோகமாக அழகர்கோவிலி லும், அப்பன் திருப்பதி என்ற இடத்திலும் ஊரணி தர்மம் ஏற் படுத்தவும், ஆய்க்குடி சுந்தனாவூர் ஆகிய இரண்டு கிராமங் களை தானம் வழங்கியதை இந்த செப்பேடு தெரிவிக்கின்றது. குறிப்பாக ஆண்டுதோறும் சித்திரை பெளர்ணமியில் இங்குள்ள