பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/966

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

656 எஸ். எம் கமால் அகமுடையார் இனத்தவரில் சேதுபதி மன்னரது தள கர்த்தர்களாக உயர்ந்த பதவிகளில் சிறப்பாக பணியாற்றிய வைரவன் சேர்வைக்காரர், வெள்ளையன் சேர்வைக்காரர் ஆகிய தளபதிகளை பிற்கால சேது நாட்டு வரலாற்றில் காணமுடிகிறது. ஆனால் கானாட்டில் திருமலை சேதுபதி மன்னரது பிரதிநிதி களாக இருந்த பெருமாள்சேர்வை, சொக்கப்பன் சேர்வை பற்றிய வேறு செய்திகளைத் தெரிந்து கொள்வதற்கும் வாய்ப்பு இல்லை. அவர்களது சொந்த ஊரான பாண்டியூரில் கூட அந்தப் பெரு மக்களைப் பற்றி தகவல்களைப் பெற முடியவில்லை. இந்தச் செப்பேட்டில் குறிப்பிடப்பெறும் மேல மாகாண சீர்மையைச் சேர்ந்த இராதாநல்லூர் தட்டில், ஆனந்துார் ஆகிய கிராமம் பாப்பக்குடியேந்தலும் (வரிகள் 23, 34) இராமநாத புரம் மாவட்டம் திருவாடானை வட்டத்தில் உள்ளன. சீர் மை' என்ற பெரு நிலப்பரப்பின் கூறு, மதுரை நாயக்க மன்னர் ஆட்சியில் நடைமுறைக்கு. வந்தது. தற்பொழுது வழக்கிலுள்ள சீமை என்ற சொல் சீர்மையின் இடைக்குறைவு. இராதா நல்லூர் தற்பொழுது இராதானுார் என்று மருவியுள்ளது. ஆனந் துார், பாப்பாக்குடியேத்தல் என்ற பெயர்களில் மாற்றம் இன்று வரை எதுவும் இல்லை. சோழர், பாண்டியர் ஆட்சியில், ஆனந்துார் இராஜராஜபுரம் என்று வழங்கப்பட்டது. கோனே ரின்மை கொண்டான் என்ற பராக்கிரமபாண்டியத் தேவனது (கி.பி. 1162-70) கல்வெட்டு ஒன்றில் இந்த ஊர் ஆனந்துார் ஆன அபிஷேகர சுந்தர நல்லூர்' என்றும் அங்கு திருக் கோயில் கொண்டுள்ள நாயனார், திருமதிச்சடை அரீவரமுடை நாயனார் என்றும் பொறிக்கப்பட்டுள்ளது. ஐந்நூறு ஆண்டுகளுக்குப் பிறகும் இந்த ஊர் அதே பழம் பெயரிலும் அங்கு உள்ள குளம் திருமதிச் சடையார் காட்டுக் குளம் என்று வழங்கப்படுவதிலிருந்து இந்த ஊர் தொன்மைச் சிறப்பு மிக்கது என்பது புலப்படுகிறது. மற்றும் இந்தச் செப் பேட்டில் வழக்கமாகக் குறிப்பிடப்படும் எல்லைகள் மிகவும் விளக்க மாகக் குறிக்கப்பட்டுள்ளன. மற்றும், இந்தச் செப்பேடு சில புதிய செய்திகளைத் தெரிவிக்கின்றன முதலாவதாக ஏற்கனவே வழங்கப்பட்ட அறக்