பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் - 73 ஒன்றான மணிமேகலையும், பண்டைய காலங்களில் கன்னியா குமரிக்கு மக்கள் தலயாத்திரை சென்று வந்ததை குரங்கு செய்க் கடலில் குமரியென்னப் பெருந்துறை எனக் குறிப்பிடுகிறது. சேது புராணம் பாடிய நிரம்பவழகிய தேசிகர் தேவிபட்டினமே ஆதி சேது எனக்குறிப்பிட்டுள்ளார். இவ்விதம் இலக்கியச் செய்திகள் முரண்பட்ட கருத்துக்களை தெரிவித்துள்ள போதிலும் இராமேஸ் வர இராமலிங்கப் பிரதிட்டை ஏற்பட்ட காரணத்தினால் திருப் புல்லாணியையும், தனுக்கோடியையும் பல நூற்றாண்டுகளாக மக்கள் ஆதி சேது என போற்றிப் பரவி வருகின்றனர். இவைகளே சேதுக்கரையும் ஆகும். o ஊர்ப்பெயர் மாற்றம் சேது நாட்டில் அளவிலும், வளமையிலும், சிறந்த சிற்றுார் களின் பெயர்கள் மாற்றம் பெற்று வந்ததை இந்தச் செப்பேடு களில் காண முடிகின்றது. சில ஊர்ப் பெயரின் விகுதியாக சமுத்திரம் என்ற சொல் சேர்த்து வழங்கப்பட்டுள்ளது. இராமநாத சமுத்திரம், நாகநாத சமுத்திரம், கோவிந்தராஜ சமுத்திரம், கிருஷ்ண சமுத்திரம், உடையநாத சமுத்திரம், மங்கைநாத சமுத்திரம், வேங்கடம்மா சமுத்திரம் என்பன அவை: இன்னும் சில ஊர்கள் தானம் வழங்கப்பட்ட சேது மன்னர் பெயரால் வழக்குப் பெற்று வந்துள்ளன. திருமலைச் சேதுபதி மன்னர் தானம் வழங்கிய பெருங்கரை, ரெகுநாத சமுத்திரம் என்றும், ரெகுநாதக்கிழவன் சேதுபதி வழங்கிய பழஞ்சிறை ரெகுநாத சமுத்திரம் என்றும், முத்துராமலிங்க சேதுபதிவழங்கிய கருக்கத்தி, செப்பேடு கொண்டான், அரியக் குடி, என்ற ஊர்கள் முறையே முத்துராமலிங்கபுரம், முத்துராமலிங்கபூபாலபுரம், முத்துராமலிங்க சமுத்திரம், என்ற பெயர் மாற்றத்துடன் மக்களால் வழங்கப்பட்டு வந்துள்ளன. இதனைப் போன்றே ரெகுநாத கிழவன் சேதுபதி மனைவி காதலி நாச்சியார் தானம் அளித்த களத்துார் கிராமம் ரெகுநாத காதலி ஆயிபுரம் என வழங்கப்பட்டது. இவையல்லாமல் பேச்சு வழக்கிலும் ஊரின் பெயர்கள் திரிபு பெற்றுள்ளன. குசவன் குழி, குசவன் குடியாகவும், காஞ்சிரன் குளம், காஞ்சிரங்குடியாகவும், கமுதை, கமுதியாகவும், புல்லன் குளம், புல்லங்குடியாகவும் புல்லுகுடி,புல்லூராகவும், திருப்பொற்