பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/975

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 665 ==--- - - - இராமநாதபுரத்தையடுத்த வேளாண் தரவை வலையன் வீரமூப்பன் மகள் வீராயி திருமணம் ஆகாத நிலையில் இளமனேரி கிராமம் நைனுக்குட்டிசேர்வைக்காரனை சேர்ந்துகற்பவதியானாள். அதையறிந்த அவளது குடும்பத்தினர் அவளை தண்டனை பண்ணி உயிர்வதை செய்துவிட்டனர். அத்துடன் அமையாமல் நைனுக்குட்டி சேர்வைக்காரனை சேதுபதி மன்னர் முன் நிறுத்தி இறந்துபோன வீராயிக்கு பழிக்குப்பழி கொடுக்கவேண்டுமென கோரினர். மன்னரும் அவர்களது நியாயத்தை விளங்கி பழிக்குப் பழி கொடுக்குமாறு உத்தரவிட்டார். * அதன்படி இறந்துபோன வீராயினது சடலத்தை ஒரு சிதையிலும், நைனுக்குட்டி சேர்வைக்காரனது தங்கை உடையக் காளை இன்னொரு சிதையிலும் உயிருடன் கிடத்திதி வைத் தனர். அப்பொழுது முதிய மூப்பன்மார்களது மனம் மாறி சிதையிலிருந்து உடையக்காளை அகற்றி தங்களுக்கு பழிக்குப் பழியாகவும், பிள்ளைக்குப் பிள்ளையாகவும் தங்களது சாதிப் பிள்ளையாக எட்டுக்கிளை மூப்பன் மார்களும் ஒப்புதல் அளித்து அவர்களது சமுதாயத்தில் சாதிப்பிள்ளை யாகிவிட்ட உடையாக் களுக்கு சிலஉரிமைகளையும் சலுகைகளையும் வழங்கும் முகமாக வரைந்தது இந்த இசைவுமுறி பட்டயம் ஆகும். மீன்பிடி சமூகத்தைச் சேர்ந்த பரவர்களிடம் சாதித் தலைவன்’ இருந்து வருவது சாதிப்பிள்ளை யுடன் ஒப் பிடத்தக்கது. இன்றைக்குச் சரியாக முன்னுாறு ஆண்டுகளுக்கு முன்னர் தங்களது சமூகத்தைச் சேர்ந்த கன்னியொருத்தி களவு மணத்தில் கற்பவதியானதற்காக அவளைக் கொன்றதுடன் அமையாமல் களவு மனத்தில் ஈடுபட்ட காதலனை பழிக்குப்பழி கோரிப்பெறும் நிலையினை அறியும் பொழுது அப்பொழுது நில விய சாதி வெறியின் பயங்கரமான பிடிப்பை புரிந்து கொள்ள முடிகிறது. மேலும், தமையன் செய்த குற்றத்திற்காக தங்கை உடையக்காள் உயிரோடு சிதையில் படுத்து உயிர்விடத் துணிந்த மன உறுதியும் அதன் காரணமாக மூப்பன்மார்களது மனச்சான்று விழித்துக் கொண்டு பெண் கொலை பாவத்திலிருந்து அவர்களை நீக்கி பெண்மைக்கு உயர்வு தந்தோர் வரிசையில் அவர்களை உயர்த்திக் கொண்டதை இந்தச் செப்பேடு தெரிவிக் கின்றது.