பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/982

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செப்பேடு எண் 87 (விளக்கம்) 1. செப்பேட்டின் காலம் : சகம் 1667 குரோதன வருடம் கி.பி. 1745 2. செப்பேட்டின் பொருள் : இராமேசுவரம் குருக்கள்மார் சபையாருக்கும், ஆரிய மகா னங்களுக்குமான பிரச்சனை பற்றிய தீர்ப்பு உரை. இராமநாதபுரம் மன்னர் முத்துக்குமார விசைய ரெகுநாத சேதுபதி திருமுன்னர் கொண்டு வரப்பட்ட வழக்கு ஒன்றின் தீர்ப்புரையை இந்தச் செப்பேடு தெரிவிக்கின்றது. இராமேசு வரம் லெட்சுமண தீர்த்தக்கரை வருவாய்களை அனுபவிக்கும் உரிமை சம்பந்தமாக இராமேசுவரம் குருக்கள் மகாசபையாருக் கும் நைனாக்கள் ஆரிய மகாஜனங்களுக்கும் இடையில் எழுந்த இந்த உரிமைப் பிரச்சினையைத் தீர்த்து வைப்பதற்காக ஒரு குழுவினை மன்னர் அமைத்தார். வேத சாத்திரங்களையும் வியாகரண தருக்கத்தையும் மனுநீதியையும் கற்றுத் தேர்ந்த இந்தச் சான்றோர்களின் பிரச்சினையைத் தீர்க்க நியமனம் பெற்ற குழுவில் கீழ்க்கண்ட சாதாரண மக்கள் அங்கம் வகித்தது விந்தையாக இருக்கிறது. நியாயம் என்பது சகல மக்களுக்கும் பொருந்துவதுதானே! புரோகிதம் சின்னைய்யன் உப்பூர் வேதமைய்யன் தேவிபட்டினம் வெங்கட்டைய்யன் இராமேசுவரம் திம்மன் ஆசாரியார் தனுஷ்கோடி ஆசாரியார்