பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/983

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 673 காமாட்சியப்பன் எத்துவெளி சேஷய்யன் சுப்பிரமணியன் கவிராயர்

9. கடல்துறை இராமநாதபிள்ளை 10. அளம் கணக்கு இருளப்பபிள்ளை 11. அட்டவணை சுப்பிரமணிய பிள்ளை 12. கவரைசங்கரன் செட்டியார் 13. திருமலைச் செட்டியார் 14. வைரவன் செட்டியார் 15. சூரியநாராயணன் செட்டி 16. வங்காரு செட்டி 17. கோமுட்டி ராமு செட்டி 18. அலிப்பிலி ராவுத்தர் 19. உத்தமபணிக்கன் 20. மயிலேறி நாடான் இந்த இருபது நடுவர் குழுவுடன் தளகர்த்தன் வெள்ளை யன் சேர்வைக்காார், பிரதானி ஆண்டியப்பபிள்ளை, பெரிய கட்டளை இராமநாத பண்டாரம், சித்திர மணியக்காரன் ஆகிய நால்வரும் இந்த ஆய்வில் முன்னிலை வகித்தனர். இவர்கள் ராம நாதபுரம் கோட்டை வாசலில் உள்ள பிள்ளையார் சன்னதியி லமர்ந்து இரு தரப்பினரது வழக்கினைக் கேட்டனர். சம்பந்தப் பட்டஆவணங்களைப் பரிசீலனை செய்தனர். இதனை விவ காரம் தேறுகிறது. என வரி எண் 27ல் வட்டார வழக்காகக் குறிக்கப்பட்டுள்ளது. முதலில் குருக்கள் மகாசபையாரது வாய்மொழியையும் அவர்கள் வசமிருந்த முறிநறுக்குகளையும் செய்தி அட்டவணை களையும் பின்னர் நைனாக்கள் ஆரிய மகாஜனங்கள் முறி நறுக்கு செய்தி அட்டவணைகளையும் படித்து பார்த்து பரிசீலித்தனர். இரு தரப்பினரும் இராமேசுவரம் கோயில் சம்பந்தப்பட்டவர்கள். ஆதலால் இராமேசுவரம் கோயில் ஆதின கர்த்தரது வசமிருந்த செப்பேட்டு ஆவணங்களும் பரிசீலிக்கப்பட்டன. அவைகளின்படி இந்த வழக்கிற்கு முன்னுாற்றுப் பதினேழு ஆண்டுகள் முன்பு இருந்து சம்பந்தப்பட்ட செய்திகள், லட்சுமணத் தீர்த்தக்கரை பட்டர்மார் எழுதிக் கொடுத்த செய்தி அட்டவணை, திருமலை