பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/985

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 676 இருநூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர், கல்வியிலும் ஞானத்திலும் சிறந்து, மக்களது வழிகாட்டிகளாக சமுதாயச் செல்வாக்கு பெற்றிருந்த அந்தணர்களுக்கிடையில் ஏற்பட்ட உரிமைப்பூசலை சேதுபதி மன்னர் எவ்விதம் தீர்த்து வைத்தார் என்பதையும், அந்த தீர்வு ஏற்படுவதற்கு நியமனம் பெற்ற நடு வர்கள் வாய்மொழி ஆவணங்கள் அனுபவம் பற்றிய செய்திகளை கி.பி. 1428ல் இருந்து சேகரித்து அறிந்த பிறகு தங்களது முடி வினைத் தெரிவித்துள்ள பாங்கு சேதுபதி மன்னரது நீதித் துறைக்கு சிறப்பளிக்கக் கூடியதாக உள்ளது. ஆதலால் இந்தச் செப்பேடு நீதித்துறை வரலாற்றின் சிறப்பான ஏடாக விளங்கு கிறது. மற்றும் வடபுலங்களில் இருந்து வந்த இந்த ஆரிய மகா ஜனங்களது குடியேற்றம் இராமேசுவரத்தில் ஏற்பட்டது. கி.பி. 1428 என்ற முக்கியமான வரலாற்று நிகழ்வையும் இந்தச் செப்பேடு சுட்டாமல் சுட்டுகிறது. ■ இந்தச் செப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தளகர்த்தர் வெள்ளையன் சேர்வை சேதுமன்னரது மிகச் சிறந்த தளபதி என்பதையும் மதுரை வரலாறு தெரிவிக்கின்றது. மற்றும் அவரது மாமனாரான தளகர்த்தர் வைரவன் சேர்வைக்காரரைப் போன்று இவரும் அறம்பல ஆற்றி அரும்புகழ் கொண்டவர். இராமநாத பண்டாரம் எனக் குறிப்பிட்டிருப்பது இராமேசுவரம் திருக்கோயில் நிர்வாகத்தை அப்பொழுது கண்காணித்து வந்த ஆதின கர்த்தரின் பொதுப்பெயர். இன்னொரு நடுவரான சித்திர மணியக்காரன் என்பவர் சேதுபதி மன்னரது சிறந்த அலுவலர் என்பதும் பரமக் குடியைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வருசிறது. இன்னும் பரமக்குடியில் மணியக்காரன் சத்திரம் என்ற பெயரில் உள்ள அன்னசத்திரம் இந்த அலுவலரை நினைவூட்டுவதாக உள்ளது. கரையேறுமிடத்தில் (வரி 11) தேறுகிறது (வரி 27) கையாடி வந்த வரிகள் (46, 41, 57) அதகடி (வரி 54) அடியளிச் சவன் (வரி 78) என்பன இந்த வட்டாரத்திற்குரிய சொற்களா கும். வரி. 57ல் குறிப்பிடப்பட்டுள்ள சொல் ரேகைப் படுத் தாமல்’ ஒரு அருமையான சொல்லாட்சியாகும். கைவிரலைப் பயன்படுத்தி ஒருபொருளைக் கையாளும்பொழுது, நமது பார் வைக்குப்படாமல் நமது விரல்கள், உள்ளங்கை, ஆகியவைகளில் உள்ள சிறு மெல்லிய கோடுகள் அந்தப் பொருளின்மீது படிந்து விடுவது இயல்பு. ஆதலால் தெரியாமல் கூட மீண்டும் தவறு செய்யக்கூடாது என்பதற்கு இந்தச்சொல் பயன்படுத்தப் பட்டுள்ளது.