பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 75 சேதுபதி மன்னர்களும் தங்களது குடும்பத்தினருடன் மேற் கொள்ளும் வழக்கமுடையவராக இருந்தனர் (செ. எண். 63) அவர்கள் தனுஷ்கோடிக்கரையில் சூரிய கிரகணம், சந்திரகிர கணம், உத்தராயணம், ஆடி, தை, அமாவாசை நாட்களில் புனித நீராடி இராமேசுவரத்தில் திருக்கோயிலில் பூஜை முதலிய வைகளை மேற்கொண்டனர் என்பதற்கு இந்தச் செப்பேடு சான்றாக அமைந்துள்ளது. சேதுபாதை : சேது யாத்திரைக்கு பல நூற்றாண்டுகளாகப் பயன்பட்ட பெருவழி இது. இப்பொழுது கிடைத்துள்ள செப்பேடுகளில் இருந்து (செ. எண்கள் 28, 30, 51, 57) இந்தப் பாதை மூன்று கிளைகளாகச் சென்று இராமேசுவரத்தை இணைத்தது எனத் தெரிய வருகிறது. முதலாவது பாதை, வடக்கே சோழ சீமையில் இருந்து தெற்கு நோக்கிக் கிழக்குக் கடற்கரை வழியே கோட்டைப் பட்டினம், சுந்தரபாண்டியன் பட்டினம், தொண்டி, திருப்பாலைக்குடி, ஆற்றங்கரை, மண்டபம் வழியாகச் சென்றது. மற்றொருபாதை, பாண்டிய நாட்டின் தலைநகரான மதுரையி லிருந்து கிழக்கு நோக்கி வைகையாற்றின் தென்கரையைத் தொட்டவாறு மானாமதுரை, பரமக்குடி, இராமநாதபுரம், நாகாச்சி, மண்டபம் வழி இராமேசுவரத்தை அடைந்தது. மூன்றாவது பாதை, கன்னியாகுமரியிலிருந்து திருநெல்வேலிச் சிமைக் கடற்கரைவழி வேம்பாற்றினை அடைந்து அங்கிருந்து வடக்கு முகமாக சேதுபதிச் சீமையின் குறுக்கே சாயல்குடி, கடுகுசந்தை, சிக்கில், திருஉத்திரகோசமங்கை, எக்ககுடி, திருப் புல்லாணி, வேதாளை, வழியாக இராமேசுவரம் நகரைச் சென்றடைந்தது. - இந்தப்பாதையைப் பயன்படுத்தும் மக்களது பயணக் களைப்பையும், பசியினையும், ஆற்றுவதற்கு, ஆங்காங்குச் சங்கிலித்தொடர் போல சேது மன்னர்கள் அமைத்திருந்த அன்ன சத்திரங்கள் இந்தப் பெருவழியின் எச்சங்களாக இன்னும் சீரழிந்த நிலையில் காட்சியளித்துக் கொண்டிருக்கின்றன. மேலும் இதே பாதைகளை ஒட்டியே மத்திய மாநில நெடுஞ்சாலைகள், பிற் காலங்களில் அமைக்கப்பட்டுள்ளன.