பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/991

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செப்பேடு எண் 88 (விளக்கம்) 1. செப்பேடு வழங்கியவர் : இராமநாதபுரம் சேதுராசன் பேட்டை வணிகர்கள் 2. செப்பேடு பெற்றவர் : பெருவயல் இரணபலிமுருகன் கோயில் தானத்தார் 3. செப்பேட்டின் காலம் : சகம் 1663 துர்மதி சித்திரை (கி.பி. 1741) 4. செப்பேட்டின் பொருள் : மேற்படி கோயிலுக்கு மகமை ஏற் படுத்தியது. இந்தச் செப்பேட்டின் தொடக்கமாக இராமநாதபுரம் மன்னர் குமாரமுத்து விஜயரெகுநாதசேதுபதியின் விருதாவளி யாக எழுபத்துநான்கு சிறப்புப்பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. முந்தையச் செப்பேடுகளில் கண்டதைத் தவிர்த்து விருதரசர் மணவாளன், யாழிக்கொடி, புலிக்கொடி, மீனக்கொடி துவசன், சேதுமார்க்க தள வினாச தர்மபரிபாலனம் பண்ணிவிச்சராச மானிய ராசா என்ற மூன்று புதிய விருதுகள் கொடுக்கப்பட் டுள்ளன. இவை மன்னரது பெருமையைப் புகழ்வதாகும். தேவிபட்டினத்தை அடுத்த பெருவயல் கிராமத்தில் தள வாய் வயிரவன் சேர்வைக்காரரால் நிர்மாணிக்கப்பட்டது இரண பலி முருகையா திருக்கோயிலாகும். இந்தக் கோயிலின் பூஜை முதலியவைகளுக்கு அதே தளவாய் முதலூர், சக்கிரவாளநல்லூர் சதுர்வேதமங்கலம், பாம்பாட்டி, பாஞ்சார், ஆகிய கிராமப் பகுதி களை சொந்தத்தில் வாங்கி தானம் வழங்கியிருந்தார். சேதுபதி மன்னரும் சாமிப்பட்டணம், கலையனூர், கிராமங்களையும், சிவ கங்கை மன்னர், முத்துவடுகநாத பெரிய உடையாத் தேவர்