பக்கம்:சேதுபதி மன்னர் வரலாறு.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

132

சேதுபதி மன்னர் வரலாறு

சேது மன்னர்கள் அறக்கொடையாக வழங்கிய
நிலக்கொடைகளின் விவரம்

கல்வெட்டுக்களின்படி

I. திருமலை ரெகுநாத சேதுபதி

திருக்கோயில்கள்

1. சொக்கநாதர் கோயில், கீழக்கரை - மாயாகுளம் சகம் கி.பி.1645.

2. உலகவிடங்கேஸ்வரர் கோயில் விரையாச்சிலை - வீரகண்டன்பட்டி கி.பி.1662.

3. லட்சுமி நாராயணப் பெருமாள் கோயில், மேலையூர்.

பெரியவராய வயல்
சிறுவராய வயல்
காட்டுக்குறிச்சி - சகம் 1585 (கி.பி.1662) கோபகிறிது.
ஆலவயல்
உட்கடை
பெரியவயல்

4. தான் தோன்றி ஈசுவரர் கோயில், சிவபுரிப்பட்டி

சாத்தனூர் சகம் 1590 (கி.பி.1668) கீலக வருஷம் ஆவணி

5. சேவுகப் பெருமாள் ஐயனார் ஆலயம், சிங்கம்புணரி.

ஆலம்பட்டி சகம் (1590) (கி.பி.1664) செளமிய

6. சாஸ்தா கோயில், கண்ணங்காரக்குடி

கண்ணங்காரக்குடி சகம் 1591 (கி.பி.1669) ராஷ்சத மாசி 5.

7. தில்லை நடராஜர் ஆலயம், மறவணி ஏந்தல்

8. லெட்சுமி நாராயணன் ஆலயம், திருமெய்யம்

புதுவயல் சகம் 1591 கி.பி.1669 செளமிய தை 1