பக்கம்:சேதுபதி மன்னர் வரலாறு.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ். எம். கமால்

147

அந்தப் புனித இடங்களும் அவைகளுக்குத் தானமாக வழங்கப்பட்ட ஊர்களும் காலவாரியாகப் பட்டியலிட்டுக் கீழே கொடுக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் இஸ்லாமியரது தொழுகை வழிபாடு நடத்தப் பெறும் இஸ்லாமியப் புனிதர்களது அடக்கவிடங்கள் அரபு மொழியில் தர்ஹாக்கள் எனப்படும். ஆனால் இந்த அரபுச் சொல்லைப் பயன்படுத்த விரும்பாத தமிழர்கள் புனித அடக்கவிடங்களையும் பள்ளி வாசல்கள் என்றே குறிப்பிடுவது உலக வழக்கமாக உள்ளது.

சேது நாட்டின் மற்றொரு சிறுபான்மையினரான கிறித்துவர்கள் சமுதாய வாழ்வில் மிகவும் பிற்பட்டு 17,18ம் நூற்றாண்டுகளில் வாழத்தொடங்கினர்.

அவர்களது தேவாலயம் ஒன்று கிழக்குக் கடற்கரையில் முத்துப் பேட்டை கிராமத்தில் அமைந்துள்ளது. அதன் வழிபாட்டுச் செலவிற்காக முத்துராமலிங்க சேதுபதி மன்னர் முத்துப்பேட்டை, தெஞ்சியேந்தல் என்ற இரு ஊர்களைச் சர்வ மானியமாக வழங்கியதற்கான கல்வெட்டும் செட்பேடும் கிடைத்துள்ளன. அவைகளின் விவரம் இந்தப் பட்டியலின் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆவணப் பதிவேடுகளின்படி


சேதுபதி மன்னர்கள் அறக்கொடையாக
வழங்கிய நிலக்கொடைகளின் விவரம்
பள்ளி வாசல்களுக்கு
தானம் வழங்கப்பெற்ற அமைப்பு தானம் வழங்கப்பட்ட ஊர் தானம் வழங்கப்பட்ட நாள்

I திருமலை சேதுபதி

1 மீரா பள்ளி வாசல், குணங்குடி

குபைங்குடி சகம் 1595 (கி.பி.1673) பிராமாதீச கார்த்திகை 5

II குமார முத்து விஜய ரகுநாத சேதுபதி

சா பள்ளி வாசல், இராமநாதபுரம்,

கிழவனேரி சகம் 1656 (கி.பி.1744) ஆனந்த தை 1.

III சிவகுமார முத்து விஜய ரகுநாத சேதுபதி

1. ஆபில்காபில் தர்ஹா இராமேஸ்வரம்