பக்கம்:சேதுபதி மன்னர் வரலாறு.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ். எம். கமால்

153

களை நடைமுறைகளை சாதாரண மக்கள் அறிந்து கொள்ளுவதற்கான வாய்ப்பே இல்லாத அவல நிலை சைவ சமயச் சாத்திரங்களிலும் தேவார, திருவாசக, திவ்வியப்பிரபந்தம் ஆகிய இலக்கியங்களிலும் தேர்ந்திருந்த பண்டிதர்களும் அவதானிகளும் இங்கு வரவழைக்கப்பட்டனர். இதைப் போன்றே பெரிய திருக்கோயில்களில் இசை, நாட்டியம், நட்டுவம், நாதஸ்வரம் ஆகிய தமிழ்க் கலைகளைப் பரப்புவதற்குக் கோயிலில் பணிபுரியும் ஊழியர்களை இசைக் குழுவினர். நாட்டிய நங்கைகள், நாதஸ்வரக் கலைஞர்கள் ஆகியோரும் ஊக்குவிக்கப்பட்டனர் என்பதை இந்த அறக்கொடைகள் மூலம் அறிந்து கொள்ளலாம்.

இத்தகைய அறிவுடை மக்கள் பெற்ற அறக்கொடைகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சேதுபதி மன்னர் அறக்கொடையாக
வழங்கிய நிலக்கொடைகள் விவரம்
VI தனியார்கள்
தானம் பெற்ற அமைப்பு தானம் வழங்கப்பட்ட ஊர் தானம் வழங்கப்பட்ட நாள்

I தளவாய் சேதுபதி

1. இராமசாமி ஐயங்கார்

மேட்டுக்கைகளத்துர் - சகம் 1560 (கி.பி.1638) வெகுதானிய வைகாசி

2. திருவேங்கடம் ஐயர்

மேலகைக்குடி - சகம் 1562 (கி.பி.1640) தை

II திருமலை சேதுபதி (கி.பி.1647-74)

1. சுந்தரமையன், அப்பாசாமி

கயிலாச மங்கலம் - சகம் 1565 (கி.பி.1643) சாதாரண தை

2. கோபால ஐயன்

வலையன்குளம் - சகம் 1591 (கி.பி.1669) செளமிய தை

3. சேனையன், சுப்பையன்

மாவிலங்கை - சகம் 1565 (கி.பி.1641) பரிதாபி தை

4. ஜகநாதையன்

வாதவனேரி ஆரம்பக்கோட்டை - சகம் 1577 (கி.பி.1655) மன்மத