பக்கம்:சேதுபதி மன்னர் வரலாறு.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ். எம். கமால்

75

7. வெள்ளகோடி

8. தில்லைநாயகம்

9. வெள்ளை மிலகி

10. பாலுக்கினியம்

11. கவுனிசம்பா

12. கொம்பன் சம்பா

13. சிரகி சம்பா

14. மாப்பிள்ளை சம்பா

15. கல்மணவாரி

16. மானாவாரி

17. வெள்ளை மானாவாரி

நாட்டு நெல்

18. பணமுகாரி

19. முருங்கன்

20. நரியன்

21. வெள்ளைக் குருவை - வருடம் முழுவதும்

22. கருப்புக் குருவை -

23. மொட்டைக் குருவை -

24. செங்கனிக் குருவை -

சேதுநாட்டுக் கைத்தறித் துணியும், தானியங்களும், எதிர்க் கரையிலுள்ள இலங்கைக்கும், வடக்கே புதுவை மாநிலத்திற்கும் பிரெஞ்சு, டச்சு வணிகர்களால் எடுத்துச் செல்லப்பட்டன. மேலும் சேதுநாட்டின் முத்துக்கள், சங்குகள் தேவிபட்டினம் துறைமுகம் வழியாக வங்காளத்திற்கும் மற்ற வட மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டு வந்தன. கேரளத்து மிளகும், தேங்காயும் சேரநாட்டில் பயன்படுத்தப்பட்டதுடன், கீழக்கரை வணிக வேந்தர் சீதக்காதி மரைக்காயரது கப்பல்கள் தொலைதுரத்திலுள்ள கம்போடியா, சுமத்திரா, மலேயா நாடுகளிலிருந்து,