பக்கம்:சேதுபதி மன்னர் வரலாறு.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84

சேதுபதி மன்னர் வரலாறு

III அரண்மனை நடைமுறைகள்


சேது மன்னர்களது ஆட்சியில் இராமநாதபுரம் அரண்மனையில் சில நடைமுறைகள் தொடர்ந்து பின்பற்றப்பட்டிருப்பதைக் கீழ்க்கண்டவைகளில் இருந்து அறிந்து கொள்ள முடிகிறது.

1. சேது மன்னரது மனைவிகள் பலர் இருந்த போதிலும் அவர்களில் செம்பி நாட்டுப் பிரிவைச் சேர்ந்த மனைவிக்குப் பிறந்த ஆண் குழந்தை மட்டும் தான் மன்னரது வாரிசாக அரண்மனை முதியவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

2. இந்த மன்னர்களில் யாராவது வாரிசு இல்லாமல் இறந்தால் சேதுபதி பதவிக்கு அந்த மன்னரது உடன்பிறந்த தங்கை அல்லது தமக்கையின் மகன் மன்னராகத் தேர்வும் செய்யப் பெற்றதால் அவன் பதவியேற்றதும் அரசு ஆவணங்களில் இறந்து போன மன்னரை தமது தந்தையாக குறிப்பிடும் வழக்கமும் இருந்தது.

3. சேது மன்னர்கள் வழங்கிய தானசாசனங்கள் அனைத்திலும் தங்களது முன்னோரது ஆட்சி பீடமான விரையாத கண்டன் (இளையான்குடி வட்டம்) ஊரினைக் குறிப்பிடுவதற்கும் அங்கிருந்த கடைசி மன்னரான ஜெயதுங்க தேவரது வம்சத்தினர் என்பவையும் குறிப்பிடத் தவறுவதில்லை.

4. பொதுவாக சேது மன்னர்கள் காலைக் கடன்களை முடித்தவுடன் தமது ராணியுடன் அரண்மனை வளாகத்திலுள்ள இராஜராஜேஸ்வரி ஆலயத்தின் காலை வழிபாட்டில் கலந்து கொள்வது அவர்களது நியதியாக இருந்தது. கோட்டைக்கு வெளியே அல்லது வெளியூர்களுக்குச் சென்று திரும்பிய பொழுதும் அரண்மனைக்குள் நுழைந்தவுடன் அவர்கள் அம்மனைத் தரிசனம் செய்த பிறகுதான் அந்தப்புரத்துக்குச் செல்வதும் அவர்களது வழக்கமாக இருந்தது.

5. சேதுபதி மன்னர்கள் அரண்மனையில் இருக்கும் பொழுது பட்டுவேட்டியும் பட்டுச் சால்வையுமாகக் காட்சி அளித்தனர். கொலு மண்டபத்திற்குச் செல்லும் பொழுதும் வெளியூர்களுக்குப் பயணம் செய்யும் பொழுதும் பட்டாலான நீண்ட மேலங்கித் தலைப்பாகை அணிமணிகள், உடைவாள் ஆகியவைகளை அணிந்து செல்வர்.

6. அரண்மனையில் ஒய்வாக இருக்கும் பொழுது ஏதாவது இலக்கியச் சுவடி ஒன்றினைப் படிப்பதையும் தமிழ்ப் பண்டிதர்கள் அல்லது வடமொழி வித்தகர்கள் அவர்களிடமிருந்து சிறந்த ராஜநீதிகளைக் கேட்டு