பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 போரிற் சேரர்க்கு நல்வலம் (வெற்றி) வழங்குகின்ற காரணத்தால் பெருநல் யானை' என்றே பாராட்டு கின்றார் பெருங்குன்றுார் கிழார். இவ்வாறு யானைப்படை சேரர்க்குப் போரில் பெரு வெற்றி நல்கியது. வேழ முடைத்து மலைநாடு' என்றபடி சேரர் ஆண்ட கடன்மலைநாட்டில் உம்பற்காடு', 'வேழக் காடு' எனும் ஊர்கள் யானையின் மிகுதியினை அந்நாளில் உணர்த்தி நின்றன. அடுத்து, குதிரைப் படையின் சிறப்பினைக் காண்போம்: 1. உளைப்பொலிந்த மா –3 ; 2 : 17 2. கடும்பரி –3 ; 5 : 12 3. செவ்வுளைய மா —4 ; 4 : 4 4. செவ்வுளைக் கலிமா —4 ; 8 : 7 5. எஃகுபடை யறுத்த கொய்சுவற் புரவி —7 ; 2 : 3; 8 : 4: 9 6. பாய்ந்தாய்ந்த மா –7 : 9: 7 7. ஆய்மயிர்க் கவரிப் பாய்மா –9 ; 10 : 36 என வரூஉந் தொடர்கள்கொண்டு பிடரிமயிரினை யுடையதும், பாய்தல் வல்லதுமாகிய குதிரை என்பது பெறப்படுகின்றது. யானைப்படைக்கு அடுத்த நிலையே குதிரைப்படைக்குத் தரப்பட்டது என்பதும் புலனாகின்றது. யானைப்படையின் பெருமை, ஆற்றல் முதலியன சிறப்பாகப் பலவிடங்களிலும் பேசப்பட்டிருக்கக் குதிரைப்படையின் பெருமையும் ஆற்றலும் ஒருசில பாடல்களில் மேலோட்ட மாகக் கூறப்பட்டிருப்பது கொண்டு இம்முடிவுக்கு வர வேண்டியுள்ளது. தேர்ப்படை இன்னும் ஒருபடிக் குறைவாகவே கூறப் பட்டுள்ளது. 1. வம்புபரந்த தேர் —3: 2: 19 2. நெடுந்தேர் —3; 5: 13 3. வடிமணி நெடுங்தேர் —6; 2: 2