பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 குறித்து ஆய்கின்றது. சிலப்பதிகாரம், முடிதுறந்து சமண சமயத்தைத் தழுவிய சேர இளவலால் இயற்றப்பெற்ற காப்பியமாகும். இக்காப்பியம் அக்கால அரசியல், ச. மு. த ா ய ம், சமயம் குறித்து அறியப் பெருந்துணை புரிகின்றது. நான்காம் இயல், தகடுர் யாத்திரை, முத்தொள்ளா யிரம், புறப்பொருள் வெண்பாமாலை என்பன குறித்த ஆய்வாகும். தகடுர் யாத்திரையில் சில செய்யுட்கள் அன்றிப் பிற கிடைத்தில. முத்தொள்ளாயிரம், ஒரு பகுதியே கிடைத்துள்ளது; அவற்றுள் இருபது செய்யுட்கள் சேர அரசமரபினர் குறித்தது ஆகும். சேர இளவல் ஒருவ ரால் எழுதப்பெற்ற புறப்பொருள் இலக்கணம், புறப் பொருள் வெண்பாமாலை ஆகும். அவ் இலக்கண நூலில் இயற்றப்பட்டுள்ள நான்கடிகளாலான எடுத்துக்காட்டுச் செய்யுட்கள் சேர அரசர்கள் குறித்துச் சில இடங்களில் மட்டும் குறிப்பிடினும் அரசியல், சமுதாய நிலையையும் குறிப்பிடுகின்றன; கற்பனையில் சிறந்து விளங்குகின்றன. ஐந்தாம் இயல், சேரநாட்டுப் பக்தி இலக்கியங்கள் குறித்தது ஆகும். இது முன்னர்க் குறிப்பிட்ட ஏனைய இலக்கியப் படைப்புகளுக்கு இவ்விலக்கியங்கள் குறைந்தன அல்ல என்று சான்று பகர்கின்றன. சேரநாட்டையும், சேரநாட்டைச் சார்ந்த பத்தொன் பது அரசர்களையும் மொத்தம் இருபத்தேழு புலவர்கள் தங்கள் செய்யுட்களில் பாடியுள்ளனர் எனத் தெரிகின்றது. சேர அரசர்கள் எண்மர் புலவராகத் திகழ்ந்துள்ளனர். இவ்வரச மரபினில் பற்றுடையவர்களாக அயல்நாடு மற்றும் மரபைச் சார்ந்த அரசர்கள் எண்மர் இருந்துள் ளனர். சில காலக்கட்டங்களில் சேரநாட்டை ஆண்ட அயலார் குறித்தும், சோழ பாண்டிய அரச மரபினர் குறித்தும் சொல்வது இன்றியமையாததாகின்றது. இப் பட்டியலில் மூவர் அடங்குவர். பல்வேறு புலவர், அரசர் குறித்த பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது. இணைப்பு