பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 VI.ல் சேரநாட்டு இலக்கியம் குறிக்கும் நகரங்களும், ஆறு: களும் குறிக்கப்பட்டுள்ளன. - பக்தி இலக்கியம் என்ற இயலில் குலசேகர ஆழ்வாரின் துதிப்பாடல்களில் காணப்படும் இலக்கிய நயம் விரிவாக எடுத்துரைக்கப்படுகின்றது. மலையாளத்தை முதல்மொழியாகக் கொண்டுள்ள கேரளத்தின் பண்பாடு, வரலாற்றுப் பின்னணி குறித்து அறியவும், சேரநாட்டின் இலக்கியம், அரசியல், சமுதாயம் இவற்றின் நிலை குறித்து அறியவும், இவ் ஆய்வு உதவும் என நம்புகின்றேன். ஆய்வுக் கண் திறந்த என் பெருமதிப் பிற்குரிய பேராசான், சான்றோர் பெருந்தகை டாக்டர் மு. வரதராசனார் அவர்களை நன்றியோடு நினைவு கூர்கின்றேன். என்னை இருபது ஆண்டுகளாக ஏற்றிப் புரந்துவரும் சென்னைப் பல்கலைக் கழகத்திற்கு என்றும் நன்றியுடையேன். பல துறையினும் பல நோக்கினும் பெருகிவரும் ஆய்வு எனும் அருந்தமிழ்ப் பெட்டகத்திற்கு இவ் ஆய்வு நூல் வளஞ்சேர்க்குமெனில் யான் பெருமித முறுவேன். குற்றங்களைந்து குறை பெய்து வாசித்தல் கற்றறி மாந்தர் கடன்' என்றபடி, இலக்கிய ஆய்வுப் பசி மிக்க தமிழ் கூறு நல்லுலகம், இவ் ஆய்வு நூலினை வர வேற்கும் என்னும் துணி புடையேன். தம் அன்பால், பண்பால், அறிவால், ஆற்றலால் தமிழகக் கல்வித் துறையினை நெறிப்படுத்தி, வளப்படுத்தி வரும் சான்றோர் தமிழகக் கல்வி அமைச்சர் மாண்புமிகு செ. அரங்கநாயகம் அவர்கள், இந்நூலிற்கு அழகியதோர் அணிந்துரை நல்கி, இந்நூலினை அணிபெறச் செய் துள்ளார்கள். அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. சி. பா. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை, தமிழில் சிறந்த நூல்கள் வெளியிட ஊக்குவிக்கும் திட்டத்தின் கீழ், இந்நூல் வெளியீட்டிற்கு நிதி யுதவி நல்கியது. தமிழ்நாடு அரசிற்கு என் நன்றி உரியது. *